தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/உள்ளூர் செய்திகள்/திருப்பூர்/ 'பட்டுப்போன தென்னைகளுக்கு இழப்பீடு வழங்க வேண்டும்'

'பட்டுப்போன தென்னைகளுக்கு இழப்பீடு வழங்க வேண்டும்'

'பட்டுப்போன தென்னைகளுக்கு இழப்பீடு வழங்க வேண்டும்'


ADDED : நவ 18, 2024 06:29 AM

Follow on GoogleFavourite on Google

ADDED : நவ 18, 2024 06:29 AM


Follow on Google
Latest Tamil News
அ நிறம் | அளவு

பல்லடம் ; ''பட்டுப்போன தென்னை மரங்கள் குறித்து முறையான கணக்கெடுப்பு நடத்தி, விவசாயிகளுக்கு, உரிய இழப்பீடு வழங்க வேண்டும்'' என, உழவர் உழைப்பாளர் கட்சி மாநிலத் தலைவர் செல்லமுத்து வேண்டுகோள் விடுத்தார்.

பல்லடத்தில் அவர் கூறியதாவது:

மத்திய அரசின் கீழ் செயல்பட்டு வரும் தென்னை வளர்ச்சி வாரியம், கேரள மாநிலம் கொச்சியை தலைநகராகக் கொண்டு செயல்பட்டு வருகிறது. அதன் மண்டல அலுவலகம் சென்னையில் செயல்பட்டு வந்தது.

பல்வேறு முயற்சிக்குப் பின், தென்னை வளர்ச்சி வாரிய அனுமதி பெற்று, கோவையிலும் மண்டல அலுவலகம் திறக்கப்பட்டது. இதனால், தென்னை விவசாயிகள் தங்கள் பிரச்னைகளை தீர்த்துக்கொள்ள அதிகாரிகளை எளிதில் அணுகக்கூடிய சூழல் ஏற்பட்டுள்ளது.

பட்டுப்போன தென்னை மரங்கள் மற்றும் நோய்வாய்ப்பட்டு சேதமடைந்த தென்னை மரங்கள் குறித்து கணக்கெடுத்து, மரம் நடுவதற்கு நிவாரணம் வழங்குவதாக தகவல் வந்துள்ளது. தென்னை மரம் நடுவதற்கு மிகக் குறைந்த தொகையே செலவாகும்.

ஆனால், பட்டுப்போன மரம் எத்தனை ஆண்டு களுக்கு பலன் தரும் என்று கணக்கெடுத்து மொத்த இழப்பீட்டையும் விவசாயிகளுக்கு வழங்கினால்தான் அது பயனுள்ளதாக இருக்கும்.

எனவே, ஒரு மரம் எத்தனை ஆண்டுகள் பலன் தரும் என்பதை கணக்கிட்டு, அதன் அடிப்படையில் விவசாயிகளுக்கு இழப்பீடு வழங்க வேண்டும்.

மத்திய அரசின் முயற்சியால், இளநீர், தேங்காய் போன்றவற்றில் விலை உயர்ந்திருக்கிறது. இந்த நிலை நீடிப்பதுடன், தொடர்ந்து இந்த வழிமுறையை பராமரிக்க வேண்டும்.

ரேஷன் கடைகளிலும், சத்துணவு கூடங்களிலும் பாமாயிலுக்கு பதில் தேங்காய் எண்ணெய் வினியோகிக்க வேண்டும்.

விவசாயிகள் வாழ்வாதாரம் சிறக்க மத்திய, மாநில அரசுகள் கவனம் செலுத்த வேண்டும்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us