UPDATED : ஜூலை 02, 2026 06:21 AM
ADDED : ஜூலை 02, 2026 03:06 AM

குப்பைக்கு தீ மூச்சுத்திணறல்
சேவூர், ரெயின்போ ரெசிடென்சி குடியிருப்புக்கு அருகில் குப்பைகள் தீ வைத்து எரிப்பதால், வசிப்பவர்கள் மூச்சுத்திணறலுக்கு ஆளாகின்றனர். இப்பகுதியில் குப்பை கொட்ட தடை விதிக்க வேண்டும்.
- சீனுராமசாமி, சேவூர்.
தெருவிளக்கு பொருத்துங்க...
நெருப்பெரிச்சல், ஜே.ஜே. நகர் குடியிருப்பில் மின்கம்பம் போட்டு நான்கு ஆண்டுகளாகிறது. மின்விளக்கு பொருத்தப்படவில்லை.
தென்னம்பாளையம் மூன்றாவது வீதியில், தெருவிளக்கு எரிவதில்லை. பழுதான மின்விளக்கை மாற்றி, புதிய விளக்கு பொருத்த வேண்டும்.
- நடராஜமூர்த்தி, தென்னம்பாளையம்.
சபாபதிபுரம், டி.இ.எல்.சி. சர்ச் காம்பவுண்ட் வீதியில் மின்கம்பத்தில் தெருவிளக்கு பொருத்தவில்லை. இரவில் கும்மிருட்டாக உள்ளது.
- தீபக்டேனியல், சபாபதிபுரம்.
அங்கேரிபாளையம், சாஸ்திரி நகர் 40 அடி ரோட்டில் தெருவிளக்குகள் எரிவதில்லை. தொழிலாளர் வேலை முடிந்து அச்சத்துடன் வீடு திரும்ப வேண்டியுள்ளது.
- ஜீவா, சாஸ்திரிநகர்.
குப்பை அள்ளணும்...
திருப்பூர் அப்பாச்சி நகரில் டிரான்ஸ்பார்மர் அருகே குப்பை கொட்டப்படுகிறது.
- பரந்தாமன், அப்பாச்சிநகர்.
வீணாகும் தண்ணீர்
திலகர்நகர் பஸ் ஸ்டாப்பில் குழாய் உடைந்து தண்ணீர் வீணாகிறது. வீடுகளுக்கு தண்ணீர் வருவதில்லை.
- மணி, திலகர்நகர்.
நெருப்பெரிச்சல் - வாவிபாளையம் ரோட்டில் குழாய் உடைந்து தண்ணீர் வீணாகிறது.
- பரமசிவம், நெருப்பெரிச்சல்.
குப்பை அள்ளுங்க
காந்திநகர் ஓடை அருகே வழிநெடுக குப்பை கொட்டுவதை வாடிக்கையாக உள்ளது. குப்பை கிடங்காக மாறி வரும் இவ்விடத்தில் குப்பை கொட்டுவதை தடுக்க வேண்டும். -
கோகுல்ராஜ், காந்திநகர்.
சாலை சறுக்குது
அவிநாசி, விஸ்வபாரதி பார்க் லே-அவுட்டில் ரோடு போடும் பணி முழுமை பெறாமல் உள்ளது. ஜல்லி கற்களால் வாகன ஓட்டிகள் தடுமாறி விழுகின்றனர்.
- சண்முகம், அவிநாசி.
தாறுமாறாக வாகனங்கள்
தென்னம்பாளையம், ஆர்.வி.இ.லே - அவுட்டில், கனரக வாகனங்கள் தாறுமாறாக நிறுத்துவதால், பிற வாகனங்கள் செல்ல முடிவதில்லை.
- ஜெயம், ஆர்.வி.இ.லே-அவுட்.
நாய்கள் தொல்லை
நல்லுார், விநாயகர் கோவில் வீதியில் நாய்கள் எப்போதும் கூட்டமாக சுற்றித்திரிகிறது. தனியே நடந்து செல்ல பலரும் அச்சப்படுகின்றனர்.
- ஸ்ருதி, நல்லுார்.
குப்பை அள்ளுங்க...
மாநகராட்சி, 23 வது வார்டு, ஆஷர்நகர் இரண்டாவது வீதியில் தேங்கியுள்ள குப்பை அள்ள வேண்டும். சுகாதாரக்கேடு ஏற்படுகிறது.
- கேசவராஜ், ஆஷர்நகர்.
