/
உள்ளூர் செய்திகள்
/
திருப்பூர்
/
ஹிந்து கடவுள் அவமதிப்பு கமிஷனர் அலுவலகத்தில் புகார்
/
ஹிந்து கடவுள் அவமதிப்பு கமிஷனர் அலுவலகத்தில் புகார்
ஹிந்து கடவுள் அவமதிப்பு கமிஷனர் அலுவலகத்தில் புகார்
ஹிந்து கடவுள் அவமதிப்பு கமிஷனர் அலுவலகத்தில் புகார்
ADDED : மே 14, 2025 11:24 PM

திருப்பூர்,; நடிகர் சந்தானம் நடித்துள்ள சினிமாவில், ஹிந்து கடவுள் அவமதிப்பு குறித்து நடவடிக்கை எடுக்க வலியுறுத்தி போலீஸ் கமிஷனர் அலுவலகத்தில் ஹிந்து முன்னணியினர் புகார் மனு அளித்தனர்.
இதுதொடர்பாக, ஹிந்து முன்னணி மாவட்ட செயலாளர் மணிகண்டன் தலைமையில் நிர்வாகிகள் புகார் மனு அளித்தனர். அதில், சந்தானம் நடித்துள்ள 'டிடி டெக்ஸ்ட் லெவல்' என்ற சினிமாவில், ஒரு பாடல் இடம் பெற்றுள்ளது. அந்த பாடலில், ஹிந்துக்கள் கடவுளாக வணங்கும், வெங்கடேச பெருமாளின் பாடல் கேலி கிண்டல் செய்து பாடப்பட்டிருந்தது.
இது ஹிந்து மதத்தின் மீதும், ஹிந்து தெய்வத்தின் மீதும் மிகுந்த நம்பிக்கை கொண்ட, ஹிந்துக்கள் வணங்கும் பெருமாளை இழிவுபடுத்தும் வகையில் உள்ளது. எனவே, ஹிந்து கடவுளை இழிவுபடுத்தி பாடல் வெளியிட்ட திரைப்படத்தின் தயாரிப்பாளர், நடிகர் சந்தானம் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும், என்று கூறப்பட்டிருந்தது.