தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/உள்ளூர் செய்திகள்/திருப்பூர்/ அங்கீகரிக்கப்படாத இ-மெயில் கலெக்டர்களுக்கு பறந்த புகார்

 அங்கீகரிக்கப்படாத இ-மெயில் கலெக்டர்களுக்கு பறந்த புகார்

 அங்கீகரிக்கப்படாத இ-மெயில் கலெக்டர்களுக்கு பறந்த புகார்


ADDED : மார் 22, 2026 05:06 AM

Follow on GoogleFavourite on Google

ADDED : மார் 22, 2026 05:06 AM


Follow on Google
அ நிறம் | அளவு

பல்லடம்: அரசு துறைகளில் பயன்படுத்தப்படும் அங்கீகரிக்கப்படாத இமெயில் முகவரிகளை நீக்க வலியுறுத்தி, ஆர்.டி.ஐ., ஆர்வலர்கள் சார்பில், 33 மாவட்ட கலெக்டர்களுக்கும் புகார் மனு அனுப்பப்பட்டுள்ளது.

இது குறித்து, 'நல்லோர் வட்டம்' ஆர்.டி.ஐ., ஆர்வலர் குழு நிர்வாகி சாவடிமுத்து கூறியதாவது:

அரசு ஊழியர்கள் தங்களது அதிகாரப்பூர்வ அரசு பணிகளுக்காகஅங்கீகரிக்கப்பட்டஇ-மெயில் முகவரிகளை மட்டுமே பயன்படுத்த வேண்டும் என்ற அரசாணை உள்ளது.

ஆனால், இதனை மீறுவது, உண்மைத்தன்மை மற்றும் வெளிப்படை தன்மையை பாதிக்கும் செயலாக கருதப்படுகிறது. ஒவ்வொரு மாவட்ட இணையதளத்திலும் அனுமதியற்ற இ-மெயில் முகவரிகளே இடம்பெற்றுள்ளன.

இந்த விதிமீறல்களுக்கு, ஒவ்வொரு மாவட்ட அலுவலகங்களில் உள்ள மாவட்ட தகவல் அலுவலர்களும் துணையாக உள்ளனர் என்பது மத்திய மின்னணு மற்றும் தகவல் தொழில்நுட்ப அமைச்சகத்தின் கவனத்துக்கு கொண்டு செல்லப்பட்டுள்ளது.

இந்த விதிமீறல்களால், அரசின் செயல்பாடுகளில் வெளிப்படைத்தன்மை, பொறுப்புணர்வு குறைந்து, தகவல் பாதுகாப்பு சிக்கல்கள், கசிவுகள், தரவுகள் திருட்டு உட்பட பிரச்னைகள் உருவாக வாய்ப்பு உள்ளது.

எனவே, இது குறித்து உடனடியாக ஆய்வு செய்து அனைத்து அரசு துறைகளிலும் உள்ள அங்கீகரிக்கப்படாதஇ-மெயில் முகவரிகளை நீக்குவதுடன், பொதுமக்கள் எளிதாக தொடர்பு கொள்ளும் வகையில், அலுவலர்களின் தொடர்பு எண், அதிகாரப்பூர்வ இ-மெயில் ஆகியவற்றைபதிவேற்றம் செய்ய வேண்டும்.

மேலும், தமிழக அரசு தலைமைச் செயலர் மற்றும் மனித வள மேலாண்மை செயலர் ஆகியோர், அரசு அலுவலகங்களில், அரசின் விதிமுறைகள் மற்றும் நடைமுறைகளை பின்பற்றுமாறு உத்தரவு பிறப்பித்து, வெளிப்படை தன்மையுடன் செயல்படுவதை உறுதி செய்ய வேண்டும்.

இவ்வாறு அவர் கூறினர்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us