நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
அனுப்பர்பாளையம் : -திருப்பூர் மாநகராட்சி, 23வது வார்டு, காந்தி நகர், தீயணைப்பு காலனி பகுதியில் கடந்த இரண்டு நாட்கள் முன் பெய்த மழையின் போது அங்கிருந்த வீதியில் பாலிதீன் பை மற்றும் பிளாஸ்டிக் பாட்டில் கழிவுகள் அடித்து சென்றது.
இதனையறிந்த, மாநகராட்சி முதலாம் மண்டல சுகாதாரத்துறை சார்பில், நேற்று தீயணைப்பு காலனி பகுதியில் முழு துாய்மை பணி மேற்கொள்ளப்பட்டது. இதில், துாய்மை பணியாளர்கள் பங்கேற்று, சாக்கடை கால்வாயை துார்வாருதல், பிளீச்சிங் பவுடர் போடுதல், கொசு மருந்து அடித்தல் உள்ளிட்ட பணிகளை மேற்கொண்டனர்.