ADDED : அக் 10, 2024 05:55 AM

அவிநாசி : அவிநாசி வட்டாரக் கிளை பணி நிறைவு ஆசிரியர் கூட்டமைப்பு சார்பில், முப்பெரும் விழா, அவிநாசியில் நடந்தது.
வட்டார தலைவர் பழனிச்சாமி தலைமை வகித் தார். பேரூராட்சி செயல் அலுவலர் (பணி நிறைவு)கோபால் முன்னிலை வகித்தார்.துணைத் தலைவர் பழனிச்சாமி வரவேற்றார்.செயலாளர் அருணாச்சலம் ஆண்டறிக்கை வாசித்தார்.
உதவி கருவூல அலுவலர் அனித்ரா தர்ஷினி, துணை கருவூல அலுவலர் கலாமணி, ஸ்டேட் வங்கி கிளை மேலாளர் ரகுபதி ராஜா, இந்தியன் வங்கி கிளை மேலாளர் கவுஷிக், வட்டார கல்வி அலுவலர் மகேஸ்வரி, சுமதி, திருநாவுக்கரசு, திருப்பூர் மாநகர தலைவர் சாமிநாதன், மாவட்ட தலைவர் சண்முகம் உள்ளிட்டோர் வாழ்த்துரை வழங்கினர். மாவட்ட செயலாளர் நடராஜன், மாநில தலைவர் சுப்பிரமணியன் ஆகியோர் பேசினர்.
நடராஜன் சண்முகவாணி ஏற்புரை வழங்கினர். பொருளாளர் சுப்பிரமணியம் நன்றி கூறினார்.
