/
உள்ளூர் செய்திகள்
/
திருப்பூர்
/
காம்பவுண்ட் விவகாரத்துக்கு தீர்வு; மாற்று இடத்தில் பாதை உருவாகிறது
/
காம்பவுண்ட் விவகாரத்துக்கு தீர்வு; மாற்று இடத்தில் பாதை உருவாகிறது
காம்பவுண்ட் விவகாரத்துக்கு தீர்வு; மாற்று இடத்தில் பாதை உருவாகிறது
காம்பவுண்ட் விவகாரத்துக்கு தீர்வு; மாற்று இடத்தில் பாதை உருவாகிறது
ADDED : செப் 26, 2025 06:31 AM

அவிநாசி; செம்பியநல்லுார் ஊராட்சி, எஸ்.மேட்டுப்பாளையத்தில் உள்ள ஸ்ரீ சாய் கார்டன் உள்ளது. இதன் பின் உள்ள காலி மனை இடங்களுக்கு செல்லும் வகையில் அணுகு சாலை வசதி கேட்டு அப்பகுதி மக்கள் சாய் கார்டன் குடியிருப்பு பகுதியில் அமைக்கப்பட்ட காம்பவுண்ட் சுவரின் ஒரு பகுதியை இடித்து வழி ஏற்படுத்தித் தர கேட்டனர்.
ஆனால், மழைக் காலங்களில் வெள்ள நீர் வீடுகளைச் சுற்றியும் சூழ்ந்து விடுவதால், பாதுகாப்புக்காக கட்டப்பட்ட காம்பவுண்ட் சுவரை இடிக்க மாட்டோம் என, குடியிருப்புவாசிகள் போராட்டம் நடத்தி சுவரை இடிக்கும் பணியை நிறுத்தினர். இந்நிலையில், நேற்று தாசில்தார் சந்திரசேகர், பி.டி.ஓ., (கிராமம்) விஜயலட்சுமி ஆகியோர் முன்னிலையில், காம்பவுண்ட் சுவரை இடிக்க அகழ் இயந்திரத்துடன் சென்றனர்.
இதற்கு எதிர்ப்பு தெரிவித்து குடியிருப்புவாசிகள் போராட்டத்தில் ஈடுபட்டனர். அதன்பின் நடந்த பேச்சுவார்த்தையில், அமைந்துள்ள மாற்று இடத்தில் பாதை ஏற்படுத்தி தர சம்மதம் தெரிவித்தனர். இதனால், அகழ் இயந்திர உதவியுடன் பாதை ஏற்படுத்தி கொடுக்கப்பட்டது.