sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

சனி, அக்டோபர் 04, 2025 ,புரட்டாசி 18, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

திருப்பூர்

/

'சர்வதேச சந்தை போட்டிகளை எதிர்கொள்ள தேவை சலுகைகள்'

/

'சர்வதேச சந்தை போட்டிகளை எதிர்கொள்ள தேவை சலுகைகள்'

'சர்வதேச சந்தை போட்டிகளை எதிர்கொள்ள தேவை சலுகைகள்'

'சர்வதேச சந்தை போட்டிகளை எதிர்கொள்ள தேவை சலுகைகள்'


ADDED : பிப் 05, 2025 11:07 PM

Google News

ADDED : பிப் 05, 2025 11:07 PM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

திருப்பூர்: சர்வதேச சந்தை போட்டிகளை சமாளிப்பதற்கான அத்தியாவசிய சலுகைகள் குறித்து மத்திய அமைச்சர்களிடம் முறையிட, திருப்பூர் பின்னலாடை துறையினர் திட்டமிட்டுள்ளனர்.

சர்வதேச சந்தைகளில், ஆயத்த ஆடை வர்த்தகத்தில், சீனாவுக்கு அடுத்தபடியாக, வியட்நாம், கம்போடியா, வங்கதேசம் போன்ற நாடுகள் கடும் போட்டியை ஏற்படுத்தி வருகின்றன. சீனா, வங்கதேசம் போன்ற நாடுகளில் பல்வேறு வரிச்சலுகைகள் கிடைப்பதால், சர்வதேச சந்தைகளில், அந்நாடுகளுடன் ஒப்பிடுகையில் நம் நாட்டில் ஜவுளி பொருட்களின் விலை, 15 சதவீதம் வரை அதிகமாக உள்ளது. நிலையான வர்த்தகத்தை உருவாக்க, போட்டியை சமாளிக்கும் திறன் உருவாக வேண்டும்.

பின்னலாடை ஏற்றுமதியாளர்கள் பல்வேறு சவால்களை கடந்து ஆடை ஏற்றுமதி செய்து வருகின்றனர். பல்வேறு வகையில், உற்பத்தி செலவினங்கள் அதிகரித்துவிட்டன. அவற்றை கட்டுப்படுத்த, அரசின் சலுகை அத்தியாவசியமாக மாறிவிட்டது.

ஏமாற்றங்கள்

கடந்த சில ஆண்டுகளாக, 'டியூட்டி டிராபேக்' சலுகை மட்டுமே, லாபமாக கருதப்படுகிறது. அதேபோல், 'பேக்கிங் கிரெடிட்' மீதான வட்டி மானியமும் முக்கியமான ஊக்குவிப்பாக இருந்தது.

வட்டி சமன்படுத்தும் திட்டத்தில், 5 சதவீதம் வரை வட்டி மானியம் கிடைத்தது; தற்போது 3 சதவீதமாக குறைந்துவிட்டது. இத்திட்டம் கடந்த, டிச., 31 ம் தேதியுடன் காலாவதியாகிவிட்டது; இத்திட்டத்தை நீட்டிப்பதுடன், அதிகபட்ச வட்டி மானியமாக 5 சதவீதம் நிர்ணயிக்க வேண்டும் என்ற கோரிக்கை பிரதானமாக இருந்தது. மத்திய பட்ஜெட்டில், அதுதொடர்பான அறிவிப்பு இல்லை.

மற்ற நாடுகளில் வடிவமைக்கப்படும் அதிநவீன தொழில்நுட்ப இயந்திரங்களை இறக்குமதி செய்ய, 'ஏ-டப்' திட்டத்தில், 15 சதவீதம் வரை மானியம் வழங்கப்பட்டது. தொழில்நுட்ப மேம்பாட்டுக்கு இது பேருதவியாக இருந்தது. இத்திட்டம் கடந்த, 2022 மார்ச் மாதத்துக்கு பிறகு நீட்டிக்கப்படாமல் இருக்கிறது. இந்தபட்ஜெட்டில் அறிவிப்பு இருக்குமென எதிர்பார்த்த தொழில்துறைக்கு ஏமாற்றமே மிஞ்சியிருக்கிறது.

பசுமை சார் உற்பத்தியில் திருப்பூர் முன்னோடியாக உள்ளது. இந்த சாதனைக்கு அரசிடம் இருந்து உரிய அங்கீகாரம் இல்லை. எனவே, மறுசுழற்சியுடன் கூடிய பசுமை சார் உற்பத்தி ஆடைகளுக்கு, பிரத்யேக வர்த்தக குறியீடு வழங்கி, அத்தகைய ஏற்றுமதிக்கு அதிகபட்ச மானியமும் வழங்க வேண்டும் என்பது, ஏற்றுமதியாளர்களின் எதிர்பார்ப்பாக இருந்தது; பட்ஜெட்டில், இதுதொடர்பான அறிவிப்பும் இல்லாதது ஏமாற்றம்தான்.

குறு, சிறு மற்றும் நடுத்தர தொழில்கள் என்ற வகைப்பாட்டில், சிறு மற்றும் நடுத்தர நிறுவனங்கள் அதிகம் பயன்பெறுகின்றன. குறுந்தொழில்களை பாதுகாக்கவும், ஊக்குவிக்கவும், குறுந்தொழில் வளர்ச்சிக்கான தனி அமைச்சகம் உருவாக வேண்டும் என்ற எதிர்பார்ப்பும் உள்ளது.

மத்திய நிதியமைச்சரிடம்

முறையிட திட்டம்

திருப்பூர் பின்னலாடை தொழில்துறையினர் கூறுகையில், ''பிணையில்லா கடன் பெறும் உச்சவரம்பு உயர்த்தப்பட்டுள்ளது; குறு, சிறு மற்றும் நடுத்தர தொழில் சலுகை பெறுவதற்கான அறிவிப்பும் இடம்பெற்றுள்ளது. இருப்பினும், அன்னிய செலாவணியை ஈட்டித்தரும் திருப்பூர் கிளஸ்டருக்கு பிரத்யேக அறிவிப்பு இல்லாதது ஏமாற்றம்தான். வட்டி சமன்படுத்தும் திட்டம், 'ஏ -டப்' திட்டம், பனியன் தொழிலுக்கான 'பி.எல்.ஐ., -2.0' திட்டம், பசுமை சார் உற்பத்தி ஆடைகளை பிரத்யேகமாக பதிவு செய்யும் வர்த்தக குறியீடு மற்றும் சிறப்பு ஊக்குவிப்பு மானியம் ஆகிய சலுகை அவசியம். இத்தகைய சலுகை இருந்தால் மட்டுமே, குறு, சிறு பின்னலாடை நிறுவனங்கள், பல்வேறு நாடுகளின் போட்டியை சமாளித்து, ஏற்றுமதி வர்த்தகத்தில் நிலைநின்று போராட முடியும். திருப்பூருக்கு தேவையான அத்தியாவசிய சலுகைகள் தொடர்பாக, மத்திய நிதி அமைச்சரை சந்தித்து கோரிக்கை விடுக்க திட்டமிடப்பட்டுள்ளது'' என்றனர்.






      Dinamalar
      Follow us