ADDED : செப் 23, 2024 12:29 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
திருப்பூர் : திருப்பூர் வடக்கு போலீசார் திருப்பூர் லட்சுமி நகரில் வசித்து வரும், உத்திர பிரதேசத்தை மாநிலத்தை சேர்ந்த சத்யந்தரா குமார், 33, சுராஜ் குமார், 23 ஆகியோரை கைது செய்து, 12.7 கிலோ கஞ்சா கலந்த சாக்லெட்டுகளை போலீசார் பறிமுதல் செய்தனர்.
திருமுருகன்பூண்டி போலீசார் அணைப்புதுாரில் சந்தேகப்படும் விதமாக நின்றிருந்த நபரிடம் விசாரித்தனர். அதில், விஜய் சந்தோஷ், 24 என்பவர் 200 கிராம் கஞ்சா பொட்டலம் வைத்திருப்பது தெரிந்தது. கொங்கு மெயின் ரோட்டில் தங்கி வேலை செய்து வரும் பீஹாரை சேர்ந்த முகமது ஹாலீப், 34 என்பவரிடமும் விசாரித்தனர்.
ஊரில் இருந்து ரயில் மூலமாக கஞ்சா பொட்டலம் கொண்டு வரப்பட்டு விற்பனை செய்தது தெரிந்தது. இருவரையும் கைது செய்து, 3.8 கிலோ கஞ்சா பொட்டலத்தை பறிமுதல் செய்தனர்.