தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/உள்ளூர் செய்திகள்/திருப்பூர்/மோதல்; 4 பேர் கைது

மோதல்; 4 பேர் கைது

மோதல்; 4 பேர் கைது


ADDED : பிப் 03, 2024 12:54 AM

Follow on GoogleFavourite on Google

ADDED : பிப் 03, 2024 12:54 AM


Follow on Google
அ நிறம் | அளவு

திருப்பூர்;திருப்பூர், காலேஜ் ரோடு, விவேகானந்தா நகரை சேர்ந்த அருண் பாண்டியன், டேனியல், ராஜேஷ், சபரி, சதீஷ் ஆகியோர் நண்பர்கள்.

நேற்று முன்தினம் இரவு எம்.ஜி.ஆர்., நகரில் இவர்கள் பேசிக் கொண்டிருந்தனர். அங்கு மது போதையில் வந்த அதே பகுதியைச் சேர்ந்த விபின்குமார், இமானுவேல் ஆகியோர் இவர்களுடன் தகராறில் ஈடுபட்டனர். ஏற்கனவே இவர்களுக்குள் முன் விரோதம் இருந்துள்ளது.இரு தரப்பினரிடையே ஏற்பட்ட தகராறு மோதலாக மாறியது.

இமானுவேல் தன்னிடமிருந்த அரிவாளால் அருண் பாண்டியனை வெட்டியுள்ளார்.அருண் பாண்டியன் நண்பர்கள் அவர்கள் இருவரையும் தாக்கினர். இரு தரப்பினரும் காயமடைந்தனர்.

சிகிச்சைக்காக மருத்துவமனையில் சேர்க்கப்பட்டனர். இது குறித்து வடக்கு போலீசார் வழக்கு பதிவு செய்தனர். இது தொடர்பாக டேனியல், 26, ராஜேஷ், 23, சபரி, 23, சதீஷ், 29 ஆகியோர் கைது செய்யப்பட்டனர்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us