தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/உள்ளூர் செய்திகள்/திருப்பூர்/ தீர்வை எதிர்நோக்கி மனுக்கள் 'சங்கமம்'

 தீர்வை எதிர்நோக்கி மனுக்கள் 'சங்கமம்'

 தீர்வை எதிர்நோக்கி மனுக்கள் 'சங்கமம்'


ADDED : பிப் 24, 2026 05:49 AM

Follow on GoogleFavourite on Google

ADDED : பிப் 24, 2026 05:49 AM


Follow on Google
Latest Tamil News
அ நிறம் | அளவு

திருப்பூர்: திருப்பூர் மாவட்ட அளவிலான பொதுமக்கள் குறைகேட்பு கூட்டம், கலெக்டர் மனிஷ் நாரணவரே தலைமையில் நேற்று நடந்தது.

பொதுமக்களிடமிருந்து மொத்தம், 769 மனுக்கள் பெறப்பட்டன.

முறையாக நடக்குமா?

பாரதி நகர் அடுக்குமாடி குடியிருப்பு பகுதி மக்கள்:

தமிழ்நாடு நகர்ப்புற வாழ்விட மேம்பாட்டு வாரியம், பாரதி நகர் திட்ட பகுதி - 1 சங்கம் செயல்படுகிறது. புதிய சங்கம் அமைக்க வாரியம் முடிவு செய்திருக்கிறது. தேர்தலை முறையாக நடத்த நடவடிக்கை எடுக்கவேண்டும்.

விசாரணை நடக்குமா?

பல்லடம், பச்சாபாளையம் பொதுமக்கள்:

நாராணாபுரம் கிராமத்தில், நீரோடை பகுதியில், கோர்ட் உத்தரவுகளை மதிக்காமல், எரியூட்டு மயானம் அமைத்துள்ளனர். 1.45 கோடி ரூபாய் கணக்கு காண்பித்துவிட்டு, வெறும் 75 லட்சம் ரூபாய்க்கு எரியூட்டு மயானம் கட்டிவிட்டு முறைகேடு நடந்துள்ளது. எரியூட்டு மயானத்தையும், தனியார் உணவகத்தினர் வாகனம் பார்க்கிங்கிற்காக அமைத்துள்ள மேடை மற்றும் தடுப்புச்சுவரையும் அகற்றவேண்டும். எரியூட்டு மயானம் அமைத்ததில் முறைகேடு தொடர்பாக, விசாரணை நடத்தவேண்டும்.

லேப்டாப் கிடைக்குமா?

இந்திய மாணவர் சங்கத்தினர்:

கடந்த 2021 - 22ம் ஆண்டு பிளஸ் 2 முடித்த மாணவர்களுக்கு, அந்தாண்டு லேப்டாப் வழங்கப்படவில்லை. தற்போது, இளநிலை படிக்கும் அம்மாணவர்களுக்கு லேப்டாப் வழங்கப்படுகிறது. அதேபோல், கடந்தாண்டு இளநிலை முடித்த மாணவர்களுக்கும் வழங்கப்படவில்லை. மேற்படிப்பு தொடரும் முதுநிலை மாணவர்களுக்கும் லேப்டாப் வழங்கவேண்டும்.

கொள்முதல் நடக்குமா?

தமிழக விவசாயிகள் சங்க (கட்சி சார்பற்றது) மாவட்ட செயலாளர் மனோகரன்:

மத்திய, மாநில அரசுகள், மக்காச்சோளத்துக்கு குறைந்தபட்ச ஆதார விலை, குவிண்டாலுக்கு 2,400 ரூபாய் நிர்ணயித்துள்ளன. ஆனால் தற்போது, தனியார் வியாபாரிகள், குவின்டால், 1,700 ரூபாய்க்கு விவசாயிகளிடமிருந்து மக்காச்சோளம் கொள்முதல் செய்கின்றனர். படைப்புழு பாதிப்பு, உரம், விதை விலை உயர்வு, கூலி உயர்வு ஆகியவற்றால் விவசாயிகள் பாதிக்கப்பட்டுள்ளனர். போதுமான விலை கிடைக்காதது, விவசாயிகளுக்கு மேலும் பாதிப்பை ஏற்படுத்துகிறது. ஏக்கருக்கு, 10 ஆயிரம் ரூபாய் வரை இழப்பு ஏற்படுகிறது. விவசாயிகளிடமிருந்து, குறைந்தபட்ச ஆதார விலைக்கு அரசு மக்காச்சோளம் கொள்முதல் செய்ய வேண்டும்.

----

குடிநீர் பிரச்னைக்கு தீர்வு கோரி மனு அளித்த காளிபாளையம், நாதம்பாளையம் பகுதி மக்கள்.

அநாகரிகம் அகலுமா? திருப்பூர் நுகர்வோர் நல முன்னேற்ற சங்க தலைவர் சரவணன் அளித்த மனு: கடந்த, 21ம் தேதி, திருப்பூரிலிருந்து நம்பியூருக்கு சென்ற அரசு பஸ்ஸில் ஏற முயன்ற பெண் பயணிகளிடம், டிரைவர் மற்றும் நடத்துனர்கள் அநாகரிகமாக நடந்துகொண்டனர். பஸ் காலியாக இருந்தபோதும், ஸ்டாப்பிங்கில் நிற்காமல் சென்றது தொடர்பாக கேள்வி எழுப்பியதற்கு அலட்சியமாக பதிலளித்தனர். கடந்த, 2ம் தேதி, திருப்பூரிலிருந்து பெருமாநல்லுார் சென்ற பஸ்ஸில், ரயில்வே ஸ்டேஷனில் ஏறிய பெண் பயணி உள்ளே வருவதற்குள், தானியங்கி கதவை மூடிவிட்டனர். அடுத்த நிறுத்தம் வரை பஸ்ஸை ஓட்டி சென்றுவிட்டனர். அரசின் விடியல் பயண திட்டத்தில் உள்ள குளறுபடிகள், ஊழியர்களின் அநாகரிக செயல்களால், பெண் பயணிகள் மிகவும் சிரமப்படுகின்றனர். அனைத்து ஸ்டாப்களிலும் நின்று, பயணிகளை ஏற்றி, இறக்கிச் செல்ல நடவடிக்கை எடுக்கவேண்டும்.



தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us