நால்ரோடு சந்திப்பில் நெரிசல்: ரவுண்டானா அமைக்க வலியுறுத்தல்
நால்ரோடு சந்திப்பில் நெரிசல்: ரவுண்டானா அமைக்க வலியுறுத்தல்
ADDED : மார் 16, 2026 07:19 AM
உடுமலை: உடுமலையில், பிரதான ரோடுகள் இணையும், ஜல்லிபட்டி நால் ரோட்டிலுள்ள ஆக்கிரமிப்புகளை அகற்றி, ரவுண்டானா அமைக்க வேண்டும், என பொதுமக்கள் வலியுறுத்தியுள்ளனர்.
உடுமலையிலிருந்து, திருமூர்த்திமலை, அமராவதி மற்றும் மூணாறு என சுற்றுலா தலங்களுக்கும், கிராமங்களுக்கு செல்லும் பிரதான வழித்தடமாக, ஜல்லிபட்டி நான்கு ரோடு சந்திப்பு அமைந்துள்ளது. சுற்றுலா வாகனங்கள், பஸ்கள் உள்ளிட்ட வாகனங்கள் மற்றும் விவசாய பணிகளுக்கு இயக்கப்படும் வாகனங்கள் செல்லும் போது, நெரிசல் ஏற்படுகிறது.
ஜல்லிபட்டி கிராமம், குறிச்சிக்கோட்டை, திருமூர்த்திமலை மற்றும் உடுமலைக்கு வரும் ரோடு என, நான்கு ரோடு சந்திப்பு பகுதி, 80 அடி அகலம் உள்ளது.ஆனால், தற்போது, ரோட்டின் இரு புறமும் ஆக்கிரமிப்புகளால், ரோடு குறுகலாகி, 20 அடி மட்டுமே பயன்பாட்டில் உள்ளது.
மீதம் உள்ள நெடுஞ்சாலைத்துறைக்கு சொந்தமான இடம், பயன்படுத்தப்படாமலும், ஆக்கிரமிப்பிலும் உள்ளது. இதனால், போக்குவரத்து நெரிசல் நிரந்தரமாகி, விபத்துக்களும் ஏற்படுகிறது.
நான்கு ரோடு சந்திப்பு பகுதியில், எளிதாக வாகனங்கள் செல்லும் வகையிலும், விபத்துகளை தடுக்கும் வகையில், ரோட்டை முழுமையாக அகலப்படுத்த வேண்டும்.
மேலும், ரோடு சந்திப்புகளில் வாகனங்கள் எளிதாக கடக்கும் வகையில், ரவுண்டானா அமைக்கவும், பிரதான ரோடுகளில் மையத்தடுப்புகள் அமைக்கவும், நெடுஞ்சாலைத்துறை அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என, மக்கள் வலியுறுத்தியுள்ளனர்.
