/
உள்ளூர் செய்திகள்
/
திருப்பூர்
/
ரோடுகள் சந்திப்பில் நெரிசல்; தீர்வு காண வலியுறுத்தல்
/
ரோடுகள் சந்திப்பில் நெரிசல்; தீர்வு காண வலியுறுத்தல்
ரோடுகள் சந்திப்பில் நெரிசல்; தீர்வு காண வலியுறுத்தல்
ரோடுகள் சந்திப்பில் நெரிசல்; தீர்வு காண வலியுறுத்தல்
ADDED : நவ 01, 2024 10:05 PM

உடுமலை ; உடுமலையில், பிரதான ரோட்டில் நிலவும் போக்குவரத்து நெரிசலுக்கு தீர்வு காண வேண்டும்.
உடுமலை பொள்ளாச்சி ரோட்டிலிருந்து, திருப்பூர் செல்லும் ரோட்டில் போக்குவரத்து நெரிசல் நிரந்தரமாக உள்ளது. பொள்ளாச்சி ரோடு மற்றும் திருப்பூர் ரோட்டில் இரு புறமும், கடைகள் மற்றும் மழை நீர் வடிகால்களை ஆக்கிரமித்து, கடைகள் அமைக்கப்பட்டுள்ளன.
மேலும், ரோடு சந்திப்பு பகுதிகளில், இரு ரோடுகளையும் ஆக்கிரமித்து, வாகனங்கள் நிறுத்தப்படுகிறது. இதனால், இப்பகுதியில் போக்குவரத்து நெரிசல் மற்றும் விபத்துக்கள் அதிகரித்து வருகிறது.
இதற்கு தீர்வு காண, பிரதான ரோடுகள் சந்திப்பில் உள்ள ஆக்கிரமிப்புகளை அகற்றவும், திருப்பூர் ரோட்டில், இரு புறமும் உள்ள கடைகள் ஆக்கிரமிப்புகளை அகற்றி, வாகனங்கள் நிறுத்தாமல் கண்காணிக்க வேண்டும்.
ரோடு சந்திப்பில் சிக்னல் அமைக்கவும், போக்குவரத்து போலீசாரை பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தவும் வேண்டும். திருப்பூர் ரோடு விரிவாக்க பணிகளையும், பழநி ரோடு, திருப்பூர் ரோடு, தாராபுரம் ரோடு, பொள்ளாச்சி ரோடு ஆகியவற்றை இணைக்கும் வகையில் திட்டமிடப்பட்ட புறவழிச்சாலை திட்டத்தை செயல்படுத்தவும் நடவடிக்கை எடுக்க வேண்டும்.