/
உள்ளூர் செய்திகள்
/
திருப்பூர்
/
ரயில்வே கேட் பகுதியில் நெரிசல்; சுரங்கப்பாதை அமைக்கப்படுமா?
/
ரயில்வே கேட் பகுதியில் நெரிசல்; சுரங்கப்பாதை அமைக்கப்படுமா?
ரயில்வே கேட் பகுதியில் நெரிசல்; சுரங்கப்பாதை அமைக்கப்படுமா?
ரயில்வே கேட் பகுதியில் நெரிசல்; சுரங்கப்பாதை அமைக்கப்படுமா?
ADDED : செப் 03, 2025 11:08 PM
உடுமலை; ராமசாமி நகர் ரயில்வே கேட் பகுதியில், போக்குவரத்து ஸ்தம்பிக்கும் பிரச்னைக்கு தீர்வாக ரயில்வே சுரங்கப்பாதை அமைக்க கோரிக்கை எழுந்துள்ளது.
உடுமலை ரயில்வே ஸ்டேஷன், உழவர் சந்தை வழியாக ராமசாமி நகர், வருவாய் கோட்டாட்சியர் அலுவலகம், அரசு கலைக்கல்லுாரி, ஐ.டி.ஐ., வட்டார போக்குவரத்து அலுவலகம் மற்றும் இதர பகுதிகளுக்கு செல்லும் ரோட்டில், ரயில்வே கேட் அமைந்துள்ளது.
உடுமலை பஸ் ஸ்டாண்டில் இருந்து தெற்கு பகுதிக்கு செல்லும் அனைத்து வாகனங்களும், இந்த ரயில்வே கேட் வழியாகவே செல்ல வேண்டும். திண்டுக்கல் அகல ரயில்பாதையில், ரயில்சேவை அதிகரிக்கப்பட்டு வரும் நிலையில், ரயில்வே கேட் மூடப்படும் போது, அந்த ரோட்டில், இருபுறங்களிலும் நீண்ட துாரத்துக்கு வாகனங்கள் அணிவகுத்து நிற்கின்றன.
காலை, மாலை நேரங்களில் போக்குவரத்து ஸ்தம்பித்து விபத்துகளும் ஏற்படுகிறது. மாற்று வழியும் இல்லாததால், அனைத்து தரப்பினரும் பாதிக்கப்பட்டு வருகின்றனர்.
இப்பிரச்னைக்கு தீர்வாக, ராமசாமி நகர் ரயில்வே கேட் பகுதியில், சுரங்கப்பாதை அமைக்க வேண்டும் என தெற்கு ரயில்வேக்கும், திருப்பூர் மாவட்ட நிர்வாகத்துக்கும் மனு அனுப்பியுள்ளனர்.