/
உள்ளூர் செய்திகள்
/
திருப்பூர்
/
முக்கோணம் சந்திப்பில் நெரிசல்; கிடப்பில் ரவுண்டானா திட்டம்
/
முக்கோணம் சந்திப்பில் நெரிசல்; கிடப்பில் ரவுண்டானா திட்டம்
முக்கோணம் சந்திப்பில் நெரிசல்; கிடப்பில் ரவுண்டானா திட்டம்
முக்கோணம் சந்திப்பில் நெரிசல்; கிடப்பில் ரவுண்டானா திட்டம்
ADDED : மே 01, 2025 11:35 PM
உடுமலை; உடுமலை அருகே, மூன்று ரோடு சந்திப்பில் நிலவும் போக்குவரத்து நெரிசலுக்கு தீர்வு காண 'ரவுண்டனா' அமைத்தல் உட்பட சிறப்புத்திட்டங்களை செயல்படுத்த வேண்டும் என்ற கோரிக்கை, பல ஆண்டுகளாக கிடப்பில் போடப்பட்டுள்ளது.
கோவை - திண்டுக்கல் தேசிய நெடுஞ்சாலையிலிருந்து, முக்கோணம் பகுதியில், ஆனைமலை ரோடு பிரிகிறது. அப்பகுதியில், ஆனைமலை, தேவனுார்புதுார் உட்பட கிராமங்களுக்கு இயக்கப்படும் பஸ்கள், இணைப்பு ரோட்டில் நிறுத்தப்படுகின்றன.
அப்போது, தேசிய நெடுஞ்சாலையில் வேகமாக செல்லும் வாகனங்களால், விபத்து ஏற்படுகிறது. மேலும், சந்திப்பு பகுதியில், இரு புறங்களிலும், பஸ்கள் நிறுத்தும் போது, தேசிய நெடுஞ்சாலையை கடக்க முடியாமல், வாகனங்கள் அணிவகுத்து நிற்கின்றன.
இப்பிரச்னைக்கு தீர்வாக, சந்திப்பு பகுதியில் தேசிய நெடுஞ்சாலையை விரிவுபடுத்தி, பஸ்கள் நிற்க தனியாக இடம் ஒதுக்க வேண்டும். இணைப்பு ரோடு பகுதியில், 'ரவுண்டனா' அமைக்க வேண்டும் என்ற கோரிக்கை, பல ஆண்டுகளாக கிடப்பில் போடப்பட்டுள்ளது.
இதனால், சந்திப்பில், விபத்துகள் தொடர்கதையாக உள்ளது. தேசிய நெடுஞ்சாலைத்துறையினர், இத்திட்டம் குறித்து உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும் என, அப்பகுதி மக்கள் மீண்டும் வலியுறுத்தியுள்ளனர்.