/
உள்ளூர் செய்திகள்
/
திருப்பூர்
/
கராத்தே போட்டியில் முதலிடம் மாணவர்களுக்கு வாழ்த்து
/
கராத்தே போட்டியில் முதலிடம் மாணவர்களுக்கு வாழ்த்து
கராத்தே போட்டியில் முதலிடம் மாணவர்களுக்கு வாழ்த்து
கராத்தே போட்டியில் முதலிடம் மாணவர்களுக்கு வாழ்த்து
ADDED : அக் 06, 2024 04:56 AM

நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
திருப்பூர் : கடந்த மாதம் 29ல் சிவகங்கையில் நடந்த தமிழ்நாடு பள்ளி குழுமம் நடத்திய மாநில கராத்தே போட்டியில் திருப்பூர் மாவட்ட கராத்தே சங்கத்தில் பயிற்சி பெற்ற மாணவர்கள் கார்த்தி, சந்தோஷ் ஆகியோர் முதலிடம் பெற்றனர்.
இவர்கள், வரும் டிசம்பர் மாதம் டெல்லியில் நடைபெற உள்ள தேசிய கராத்தே போட்டியில் பங்கேற்கின்றனர். இவர்களை கலெக்டர் கிறிஸ்துராஜ், அனிதா டெக்ஸ்காட் நிர்வாக இயக்குனர் சந்திரசேகர் உள்ளிட்டோர் வாழ்த்தினார். திருப்பூர் மாவட்ட கராத்தே சங்க தலைவர் ரவிச்சந்திரன், செயலாளர் சக்திவேல், பொருளாளர் கவுதம் ஆகியோர் உடன் இருந்தனர்.