/
உள்ளூர் செய்திகள்
/
திருப்பூர்
/
தேசிய கபடி போட்டியில் இரண்டாமிடம் வாகை சூடிய வஞ்சியர் அணிக்கு பாராட்டு
/
தேசிய கபடி போட்டியில் இரண்டாமிடம் வாகை சூடிய வஞ்சியர் அணிக்கு பாராட்டு
தேசிய கபடி போட்டியில் இரண்டாமிடம் வாகை சூடிய வஞ்சியர் அணிக்கு பாராட்டு
தேசிய கபடி போட்டியில் இரண்டாமிடம் வாகை சூடிய வஞ்சியர் அணிக்கு பாராட்டு
ADDED : நவ 23, 2024 11:11 PM

திருப்பூர்: தேசிய கபடி போட்டியில் அசத்தி, இரண்டாமிடம் பெற்ற, தமிழக, 17 வயது மாணவியர் கபடி அணிக்கு, திருப்பூர் மாவட்ட கபடி கழகம் சார்பில் பாராட்டு தெரிவிக்கப்பட்டது.
ம.பி., மாநிலம், நரசிங்பூரில், எஸ்.ஜி.எப்.ஐ., சார்பில், 17 வயதுக்குட்பட்ட மாணவியர் தேசிய கபடி போட்டி நடந்தது. இதில் இறுதிசுற்றுக்கு முன்னேறிய, தமிழக மாணவியர் கபடி அணி, இரண்டாமிடம் பெற்றது. 36 - 35 என்ற புள்ளிக்கணக்கில், அரியானா முதலிடம் பெற்றது. ஒரு புள்ளி வித்தியாசத்தில், நுலிழையில் வெற்றி வாய்ப்பை தமிழக அணி தவற விட்டாலும், தேசிய போட்டியில் இரண்டாமிடம் பெற்றதற்கு, பாராட்டுகள் குவிந்து வருகிறது.
இந்நிலையில், தேசிய கபடி அணியில், திருப்பூர் வீரர்கள் யாரும் இல்லாவிட்டாலும், ம.பி.,யில் அசத்திய தமிழக கபடி அணியை ஊக்குவிக்க, திருப்பூர் மாவட்ட கபடி கழகம் முடிவு செய்தது. திருப்பூர், காங்கயம் ரோடு, மாவட்ட கபடி கழக அலுவலகத்தில், பாராட்டு விழா நடந்தது.
நிகழ்ச்சிக்கு, மாவட்ட கபடி கழக சேர்மன் கொங்கு முருகேசன் தலைமை வகித்தார். மாவட்ட கபடி கழக செயலாளரும், மாநில கபடி கழக பொருளாளருமான ஜெயசித்ரா சண்முகம், பொருளாளர் ஆறுச்சாமி முன்னிலை வகித்தனர். தேசிய கபடி போட்டியில் அசத்திய, தமிழக கபடி வீராங்கனைகள், அணியின் பயிற்சியாளர், மேலாளர் உள்ளிட்டோருக்கு தலா, 5,000 ரூபாய் வீதம், 15 நபர்களுக்கு, 75 ஆயிரம் ரூபாய் ரொக்க பரிசு வழங்கப்பட்டது.
தமிழக அணியின் பயிற்சியாளராக செயல்பட்ட, நத்தக்காடையூர் அரசு மேல்நிலைப்பள்ளி உடற்கல்வி இயக்குனர் பிரதீப்கமல், அணி மேலாளராக செயல்பட்ட, முத்துார் அரசு மேல்நிலைப்பள்ளி உடற்கல்வி ஆசிரியர் செந்திலதிபன், அணி மேலாளர் காங்கயம் - ஸ்ரீராஜராஜேஸ்வரி பள்ளியின் உடற்கல்வி ஆசிரியை ரஞ்சனி ஆகியோருக்கும், நினைவுப்பரிசு, வழங்கி பாராட்டு தெரிவிக்கப்பட்டது. இந்நிகழ்ச்சியில், மாவட்ட விளையாட்டு ஆய்வாளர் மகேந்திரன், மாவட்ட கபடி கழக துணை சேர்மன் முருகானந்தம், துணைத்தலைவர் ராமதாஸ், செய்திதொடர்பாளர் சிவபாலன் மற்றும் புரவலர்கள், நிர்வாகிகள் பாராட்டு விழாவில் பங்கேற்றனர்.