/
உள்ளூர் செய்திகள்
/
திருப்பூர்
/
மூத்தோர் தடகள போட்டி: வெற்றி பெற்றவருக்கு பாராட்டு
/
மூத்தோர் தடகள போட்டி: வெற்றி பெற்றவருக்கு பாராட்டு
மூத்தோர் தடகள போட்டி: வெற்றி பெற்றவருக்கு பாராட்டு
மூத்தோர் தடகள போட்டி: வெற்றி பெற்றவருக்கு பாராட்டு
ADDED : ஜன 06, 2024 11:07 PM

பல்லடம்:மூத்தோர் தடகள போட்டியில் வெற்றி பெற்றவர்களுக்கு பாராட்டு தெரிவிக்கும் நிகழ்ச்சி பல்லடத்தில் நடந்தது.
தமிழக அளவிலான மூத்தோர் தடகளப்போட்டி, திருவண்ணாமலையில் சமீபத்தில் நடைபெற்றது. பல்லடத்தில் இருந்து பங்கேற்று வெற்றி பெற்றவர்களுக்கு பாராட்டு தெரிவிக்கும் நிகழ்ச்சி அரசு ஆண்கள் பள்ளியில் நடந்தது.
இதில், 5 கி.மீ., நடைபோட்டியில், பத்மாவதி 60 முதல் இடம் பிடித்தார். வட்டு எறிதல் போட்டியில், விஜயலட்சுமி 50, 800 மீ., நடை போட்டியில், சத்தியவதி 40, ஈட்டி எறிதல் போட்டியில், நாகரத்தினம் 60 ஆகியோர் இரண்டாம் இடம் பெற்றனர்.
இதேபோல், ஓட்டப்பந்தயத்தில், சதீஷ்குமார் 30, நடை போட்டியில், தங்கராஜ் 65 மற்றும் தடை தாண்டி ஓட்டத்தில், கலைவாணி 35 ஆகியோர் மூன்றாம் இடம் பெற்றனர்.
வெற்றி பெற்றவர்களுக்கு, பல்லடம் கால்பந்து கழக தலைவர் திருமூர்த்தி மற்றும் நிர்வாகிகள் பகவான் துரை, பிரகாஷ், பாலு, ஷேக் முகமது உட்பட பலர் பங்கேற்று பாராட்டு தெரிவித்தனர்.