sub-imageடைம்லைன்
sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

ஞாயிறு, மார்ச் 29, 2026 ,பங்குனி 15, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

திருப்பூர்

/

 தேசிய வேலை உறுதி திட்டத்தின் பெயர் மாற்றம் காங்., கட்சியினர், விவசாயிகள் போராட்டம்

/

 தேசிய வேலை உறுதி திட்டத்தின் பெயர் மாற்றம் காங்., கட்சியினர், விவசாயிகள் போராட்டம்

 தேசிய வேலை உறுதி திட்டத்தின் பெயர் மாற்றம் காங்., கட்சியினர், விவசாயிகள் போராட்டம்

 தேசிய வேலை உறுதி திட்டத்தின் பெயர் மாற்றம் காங்., கட்சியினர், விவசாயிகள் போராட்டம்


ADDED : ஜன 31, 2026 05:01 AM

Google News

ADDED : ஜன 31, 2026 05:01 AM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

- நிருபர் குழு -:

உடுமலையில், விவசாயத்தொழிலாளர் சங்கம் சார்பில், ஊரக வேலை உறுதி திட்டத்தை பாதுகாக்க வலியுறுத்தி போராட்டம் நடந்தது.

உடுமலையில், அகில இந்திய விவசாய தொழிலாளர் சங்கம் சார்பில், தேசிய ஊரக வேலை உறுதி சட்டத்தை, பெயர் மாற்றி சட்ட திருத்தம் செய்ததை ரத்து செய்ய வேண்டும். இத்திட்டத்தில் வேலை நாட்களை 200 ஆக உயர்த்தவும், தினக்கூலியை, ரூ.700 ஆக உயர்த்தி, கூடுதல் நிதி ஒதுக்க வலியுறுத்தி, உடுமலை குட்டை திடலில் உள்ள காந்தி சிலைக்கு மாலை அணிவித்து, மக்கள் ஒற்றுமை உறுதி மொழி ஏற்பு நிகழ்ச்சியும், ஊர்வலமாக சென்று, உடுமலை பி.டி.ஓ.,விடம் மனு அளித்தனர்.

போராட்டத்துக்கு, உடுமலை ஒன்றியத்தலைவர் ரங்கராஜ் தலைமை வகித்தார். ஒன்றிய செயலாளர் கனகராஜ், முன்னிலை வகித்தார்.

மாவட்ட செயலாளர் பஞ்சலிங்கம், குடிமங்கலம் செயலாளர் ஆறுமுகம், மடத்துக்குளம் செயலாளர்கள் மாசாணம், வல்பூரான், விவசாய தொழிலாளர் சங்க நிர்வாகிகள் மற்றும் வேலை உறுதித்திட்ட பணியாளர்கள் பங்கேற்றனர்.

* கோவை தெற்கு மாவட்ட காங்., சார்பில், மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதி திட்டத்தின் பெயரை மாற்றிய, மத்திய அரசை கண்டித்தும், மகாத்மா காந்தியின் பெயரை மீண்டும் இடம் பெற செய்ய வேண்டும் என, வலியுறுத்தி வாயில் கருப்பு துணி கட்டி வடக்கு, தெற்கு ஒன்றிய அலுவலகங்கள் முன் போராட்டம் நடந்தது.

முன்னாள் எம்.எல்.ஏ. கந்தசாமி போராட்டத்தை துவக்கி வைத்தார். மாவட்ட தலைவர் சக்திவேல் தலைமை வகித்தார். நகர தலைவர் செந்தில்குமார் மற்றும் நிர்வாகிகள் பங்கேற்றனர். அதில், தேசிய ஊரக வேலை உறுதி திட்டத்தின்பெயர் மாற்றியதற்கு மத்திய அரசுக்கு கண்டனம் எதிர்ப்பு தெரிவிக்கப்பட்டது.

* அகில இந்திய விவசாய தொழிலாளர் சங்கத்தின் சார்பில், மகாத்மா காந்தியின், 78வது நினைவு நாள், பொள்ளாச்சி பழைய பஸ் ஸ் டாண்ட் அருகே நடந்தது. தாலுகா செயலாளர் பட்டீஸ்வரமூர்த்தி தலைமை வகித்தார். காந்தி சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர்.மதநல்லிணக்கம் பாதுகாப்போம் என உறுதியேற்றனர். வேலை உறுதி திட்ட பெயரை மாற்றக்கூடாது என, கோஷமிட்டனர்.






      Dinamalar
      Follow us