ADDED : பிப் 05, 2026 04:55 AM

நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
திருப்பூர்: வேலை உறுதி திட்டம், மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலைவாய்ப்பு திட்டம் என்ற பெயரிலேயே தொடர வலியுறுத்தி, மாநகர் மாவட்ட காங்கிரஸ் கமிட்டி சார்பில் திருப்பூர் கலெக்டர் அலுவலகம் முன் நேற்று ஆர்ப்பாட்டம் நடந்தது.
மாநகர் மாவட்ட தலைவர் கோபால்சாமி தலைமை வகித்தார். முன்னாள் தலைவர் கிருஷ்ணன், கவுன்சில் செந்தில்குமார் முன்னிலை வகித்தனர். .
தலைவர் கோபால்சாமி பேசுகையில், ''இத்திட்டம் மகாத்மா காந்தி பெயரிலேயே தொடர வேண்டும். புதிதாக சூட் டப்பட்ட வி.பி.ஜி. ராம் ஜி என்ற பெயர் வாபஸ் பெறப்பட வேண்டும். காலதாமதமின்றி நிலுவை தொகையை வழங்க வேண்டும். ஆண்டுக்கு, 150 நாட்கள் வேலை வாய்ப்பு வழங்க வேண்டும்; தினசரி சம்பளமாக, 400 ரூபாய் நிர்ணயிக்க வேண்டும். காந்தியடிகளை அவமதிக்கும் வகையில், பெயர் மாற்றம் செய்துள்ளனர்,'' என்றார்.

