ADDED : டிச 09, 2024 04:48 AM

நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
கருவலுாரில், அவிநாசி வட்டார காங்., சார்பில் கிராம கமிட்டி கட்டமைப்பு கூட்டம் நடந்தது. தேசிய செயலாளர் கோபிநாத் பழனியப்பன் தலைமை வகித்தார். மாநில பார்வையாளர்கள் அழகு ஜெயபாலன், செல்வகுமார், வட்டார தலைவர்கள் லட்சுமணசாமி, கொங்கு தங்கமுத்து, தாழ்த்தப்பட்டோர் நலத்துறை மாநில துணைத்தலைவர் செல்வராஜ், அமைப்பு சாரா
தொழிலாளர் மாநில ஒருங்கிணைப்பாளர் சத்தியமூர்த்தி ஆகியோர் முன்னிலை வகித்தனர். மாணவி காவியாஸ்ரீக்கு 40 ஆயிரம் ரூபாய்; ஸ்ரீஜாவுக்கு 25 ஆயிரம் ரூபாய் கல்வி உதவித்தொகை வழங்கப்பட்டது.
அவிநாசி நகர பொறுப்பாளர் கோபால்சாமி, மாநில பொதுக்குழு உறுப்பினர் மகாலிங்கம் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.