/
உள்ளூர் செய்திகள்
/
திருப்பூர்
/
'கன்ஸ்ட்ரோ மெகா - 2025' கண்காட்சி இன்று நிறைவு
/
'கன்ஸ்ட்ரோ மெகா - 2025' கண்காட்சி இன்று நிறைவு
ADDED : ஜூலை 20, 2025 11:15 PM

திருப்பூர்; திருப்பூர் சிவில் இன்ஜினியர்ஸ் அசோசியேசன் சார்பில் 20வது ஆண்டு கட்டுமானப் பொருட்கள் கண்காட்சி, 'கன்ஸ்ட்ரோ மெகா 2025' கடந்த 18ம் தேதி திருப்பூர், தாராபுரம் ரோடு வித்யா கார்த்திக் மண்டபத்தில் துவங்கியது. 200க்கும் மேற்பட்ட அரங்குகள் இடம்பெற்றுள்ளன.
கண்காட்சிக்கு அனுமதி இலவசம். தினமும் மாலை நேரம் கலை நிகழ்ச்சிக்கு ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. நேற்று 'டிவி' புகழ் கலைஞர்கள் பங்கேற்ற கலக்கல் 2025 நிகழ்ச்சி நடந்தது.
லயன்ஸ் கிளப், லோட்டஸ் கண் மருத்துவமனை சார்பில், கண் மருத்துவ முகாம்; குமரன் ரோட்டரி சங்கம், திருப்பூர் நியுரோ சென்டர் சார்பில் மருத்துவ பரிசோதனை முகாமும் நடந்தது. பார்வையாளர்களுக்கு இலவச மரக்கன்றுகளும் வழங்கப்பட்டது.
அரங்குகளில், கட்டடங்களுக்குத் தேவையான மணல், சிமென்ட், இரும்பு, பெயின்ட், செங்கல், ரெடிமேட் கான்கிரீட் ஆகியன உற்பத்தி மற்றும் விற்பனை செய்யும் நிறுவனங்கள் உள்ளன.
டைல்ஸ், கிரானைட்ஸ், மரம் மற்றும் மரம் சார்ந்த பொருட்கள்; அலுமினிய பார்ட்டிஷன், ஜன்னல் கதவு; கண்ணாடி வகைகள்; குளியலறை, சமையலறை, படுக்கையறை உள்ளிட்ட அனைத்து அறைகளுக்குமான பர்னிச்சர் மற்றும் உபகரணங்கள்; கண்காணிப்பு கேமரா, லாக்கர் உள்ளிட்ட பாதுகாப்பு பொருட்கள், எலக்ட்ரானிக், எலக்ட்ரிகல் பொருட்கள்; ஆட்டோமேஷன்; ஸ்டெயின்லெஸ் ஸ்டீல் பொருட்கள் என அனைத்து வித நிறுவனங்களும் ஸ்டால் அமைத்துள்ளன.
கண்காட்சியை பல்லாயிரம் பேர் பார்வையிட்டு வருகின்றனர். கண்காட்சி இன்றுடன் நிறைவடைகிறது.

