/
உள்ளூர் செய்திகள்
/
திருப்பூர்
/
வீடு கட்டி தருவதில் கட்டுமான நிறுவனம் மோசடி உரிமையாளர் தற்கொலை
/
வீடு கட்டி தருவதில் கட்டுமான நிறுவனம் மோசடி உரிமையாளர் தற்கொலை
வீடு கட்டி தருவதில் கட்டுமான நிறுவனம் மோசடி உரிமையாளர் தற்கொலை
வீடு கட்டி தருவதில் கட்டுமான நிறுவனம் மோசடி உரிமையாளர் தற்கொலை
ADDED : நவ 10, 2025 11:46 PM
உடுமலை: உடுமலையில், வீடு கட்டித்தருவதில் மோசடி செய்ததால், மனமுடைந்தவர் துாக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
உடுமலை ஜி.டி.வி., லே அவுட்டைச்சேர்ந்தவர் சந்திரசேகரன், 55. அவரது மனைவி காந்திமதி. மகன் பிரதீப் அமெரிக்காவில் பணியாற்றி வருகிறார்.
சந்திரசேகரன், ஜி.டி.வி.,லே - அவுட்டிலுள்ள தனக்கு சொந்தமான, 8 சென்ட் இடத்தில், பழைய வீட்டை இடித்து விட்டு, புதிதாக, 2,800 சதுர அடியில் வீடு கட்டித்தருமாறு, குருவாயூரப்பன் பில்டர்ஸ் உரிமையாளர் சிவவிஷ்ணு சிங் மற்றும் அவரது சகோதரர் ஹர்பான் சிங் ஆகியோரிடம் ஒப்பந்தமிட்டுள்ளார்.
கடந்தாண்டு ஜனவரி மாதம் பூமி பூஜை போடப்பட்டு பணிகள் துவங்கிய நிலையில், ஒப்பந்தப்படி ஆறு மாதத்தில் வீடு கட்டி தராமல் இழுத்தடித்துள்ளனர். கடந்த ஏப்., மாதம் கேட்ட போது, 40 நாட்களுக்குள் முடித்து தருவதாக தெரிவித்துள்ளனர்.
ரூ. 55.16 லட்சத்திற்கு ஒப்பந்தமிட்ட நிலையில், 54 லட்சம் வரை கட்டுமான நிறுவனத்தினர் வசூல் செய்ததோடு, 15 மாதமாகியும் கட்டித்தராமல், தரமற்ற முறையில் பணிகள் மேற்கொண்டுள்ளனர்.
இது குறித்து அவர், தனக்கு தெரிந்த பெயின்டரிடம் புலம்பிய நிலையில், குருவாயூரப்பன் பில்டர்ஸ் நிறுவன ஊழியர்கள் மிரட்டியுள்ளனர். இதனால், மனமுடைந்த சந்திரசேகரன், கடிதம் எழுதிவைத்து விட்டு, தனக்காக கட்டி வரும் வீட்டிலேயே, துாக்கு மாட்டி தற்கொலை செய்து கொண்டார்.
இது குறித்து, உடுமலை போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.

