sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

சனி, செப்டம்பர் 06, 2025 ,ஆவணி 21, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

திருப்பூர்

/

வாரம் ஒரு வார்டு: மேம்பாலம் கட்டினால் போக்குவரத்து எளிதாகும்! காங்கயம் ரோட்டில் வாகன ஓட்டிகளுக்கு நிம்மதி கைகூடும்

/

வாரம் ஒரு வார்டு: மேம்பாலம் கட்டினால் போக்குவரத்து எளிதாகும்! காங்கயம் ரோட்டில் வாகன ஓட்டிகளுக்கு நிம்மதி கைகூடும்

வாரம் ஒரு வார்டு: மேம்பாலம் கட்டினால் போக்குவரத்து எளிதாகும்! காங்கயம் ரோட்டில் வாகன ஓட்டிகளுக்கு நிம்மதி கைகூடும்

வாரம் ஒரு வார்டு: மேம்பாலம் கட்டினால் போக்குவரத்து எளிதாகும்! காங்கயம் ரோட்டில் வாகன ஓட்டிகளுக்கு நிம்மதி கைகூடும்


ADDED : ஜூலை 04, 2025 11:11 PM

Google News

ADDED : ஜூலை 04, 2025 11:11 PM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

திருப்பூர் மாநகராட்சி, 48வது வார்டில், நல்லுார், ஜே.எஸ்.கார்டன், பொன்முத்து நகர், பிரபு நகர் பொன் சுப்பு நகர், அத்தி மரத்துப்புதுார், பள்ளக்காட்டு புதுார், இந்திரா நகர், காளியப்பா நகர், ஆர்.வி., நகர் தெற்கு, கே.என்.எஸ்., கார்டன், சேரன் நகர், அமர்ஜோதி பட்டத்தரசி அம்மன் நகர், ஜி.ஜே.வி., என்கிளேவ், ராக்கியாபாளையம், பகவதி அம்மன் நகர், கணபதிபாளையம், சிவசக்தி நகர், சிவசக்தி நகர் எக்ஸ்டென்ஷன் ஆகிய பகுதிகள் அடங்கியுள்ளன.

இந்த வார்டில், ஏறத்தாழ, 20 ஆயிரம் பேர் வசிக்கின்றனர். பெரும்பாலான வீதிகள், தெருக்கள் சொந்த வீடு, அங்கீகரிக்கப்பட்ட மனைகளுடன் இருப்பதால், தார் சாலை வசதி, 60 சதவீதம் பூர்த்தியாகியுள்ளது. குடிநீர் ஐந்து முதல் ஆறு நாட்களுக்கு ஒருமுறை வழங்கப்படுகிறது. மேட்டுப்பாங்கான வார்டாக இருந்த போதும், நிலத்தடிநீர் மட்டம் காரணமாக போர்வெல் ஓரளவு கைகொடுக்கிறது; உப்புத் தண்ணீருக்கு பிரச்னை இல்லை.

திருப்பூர் - காங்கயம் ரோடு சமீபத்தில் உயரப்படுத்தப்பட்டதால், பள்ளக்காட்டுப்புதுார், அத்திமரத்துப்புதுார் ஸ்டாப், செல்லும் ரோடு மட்டம் கீழ் சென்று விட்டது. கால்வாய் பெரிய குழியாக உள்ளது. கனரக வாகனங்கள் இடதுபுறம் திரும்பி விட்டால், விபத்தில் சிக்கும் சூழல் உள்ளது. பள்ளக்காட்டுப்புதுார் மேல்நிலை நீர்த்தேக்க தொட்டியை சீரமைக்க வேண்டும். துாண்களில் இருந்து சிமென்ட் பூச்சு விழுந்து, அபாயகரமான நிலையில் உள்ளது. மின்கம்பங்கள் பல மாற்றப்படாமல், எப்போது வேண்டுமானாலும் விழும் நிலையில் உள்ளது.

நல்லுார் மண்டல அலுவலகம் முன் உயர்மட்ட நடை மேம்பாலம் கட்டப்பட்டது. யாரும் பயன்படுத்துவதில்லை. குப்பை நிறைந்து, விளக்கு வெளிச்சமில்லாததால், பகலிலேயே விரும்பதகாத சம்பவங்கள் நடக்கிறது. மிக அருகிலேயே போலீஸ் ஸ்டேஷன் இருந்தும் இவ்வாறு நடப்பதாக மக்கள் குற்றம்சாட்டுகின்றனர். நல்லுாரில் இருந்து காசிபாளையம் சாலை திரும்பும் வளைவில் அடிக்கடி வாகன விபத்து ஏற்படுகிறது. புதியதாக சிக்னல் அமைக்க வேண்டும். போக்குவரத்து போலீசார் விதிமீறி பயணிப்பவரை கவனிக்க வேண்டும்.

சறுக்கும் சாலை

வார்டில் தலையாய பிரச்னையாக பாதாள சாக்கடை பணி, நிறைவுற்ற பகுதியில் தார்சாலை அமைத்துக் கொடுக்கப்படாமல் உள்ளது. நல்லுார் விநாகர் கோவில் வீதி, மாரியம்மன் கோவில் பின், ராக்கியாபாளையம் - செவந்தம்பாளையம் ரோடு உள்ளிட்ட இடங்களில் தார் பெயர்ந்து, மண் சாலை, கற்களுடன் உள்ளதால், தினம் ஒரு விபத்து ஏற்படுகிறது. இதனால், பள்ளி செல்லும் மாணவ, மாணவியர் சிரமப்படுகின்றனர்.

குறிப்பாக, 3 - 4 கி.மீ., துாரத்துக்கு சாலை சேதமாகி இருப்பதால், பள்ளிக்கு செல்லும் வாகனங்களுக்கு தாமதம் ஏற்படுகிறது. பாதாள சாக்கடை இணைப்பு, சீரமைப்பு பணி துவங்கினால், மூன்று முதல் ஆறு மாத காலம் இழுபறியாக பணி நடக்கிறது. பணியை விரைந்து முடிப்பதில்லை என மக்கள் குற்றம்சாட்டுகின்றனர்.

தேவை பராமரிப்பு

இந்த வார்டில் மூன்று பூங்காக்கள் உள்ளது. பொன்முத்துநகர் பூங்கா பகல் மட்டுமின்றி, இரவிலும் செயல்படுகிறது. விளக்குகளும் பொருத்தப்பட்டுள்ளதால், இரவு, அதிகாலை நேரங்களில் பலர் உடற்பயிற்சிக்கு பயனுள்ளதாக உள்ளது. சேரன் நகர் பூங்கா பயன்படுத்தும் நிலையில் உள்ளது. ஆனால், ஜே.எஸ்., கார்டனில் உள்ள பூங்கா மாநகராட்சியின் பராமரிப்பு இல்லாமல், சுகாதாரக்கேடாக காணப்படுகிறது. பூங்காவை பராமரித்து, பயன்பாட்டுக்கு கொண்டு வர வேண்டும் என மக்கள் வலியுறுத்துகின்றனர்.

உயர்மட்ட மேம்பாலம்

திருப்பூருக்குள் வந்து செல்ல பிரதான வழியாக ராக்கியாபாளையம் பிரிவு உள்ளது. காங்கயம் - திருப்பூர் ரோட்டை இணைக்கும் இங்குள்ள நால்ரோட்டில் இருந்து மணியகாரம்பாளையம், செவந்தம்பாளையம் பகுதிக்கு வாகனங்கள் பயணிக்கிறது. தினமும், 20 - 30 ஆயிரம் வாகனங்கள் செல்கின்றன. திருச்சி, தஞ்சாவூர், மயிலாடுதுறை உள்ளிட்ட மத்திய மாவட்டங்களில் இருந்து பஸ்கள் திருப்பூருக்குள் நுழையும் முக்கிய வழி என்பதால், நெரிசலுக்கு பஞ்சமில்லை. ராக்கியபாளையம் நால்ரோட்டில் உயர்மட்ட பாலம் கட்டினால், தாராரம் ரோடு (செவந்தாம்பாளையம்), காங்கயம் ரோடு (ராக்கியபாளையம்), ஊத்துக்குளி ரோடு (மண்ணரை) இணைக்கும் புதிய வழித்தடம், விரிவான சாலை வசதி கிடைக்கும்.

சுருங்கும் ஓடை

நல்லுார், முத்தணம்பாளையம், செவந்தாம்பாளையம் பகுதியில் இருந்து மழைநீர் நொய்யலுக்கு பாய்ந்தோட, சிறு ஓடைகள் பல இருந்துள்ளது. வீதி, தோட்டம், காம்பவுண்ட் அமைக்கும் போது கொஞ்சம், கொஞ்சமாக நெருக்கி இருக்கும் இடம் தெரியாமல் ஓடையை ஆக்கிரமித்து விட்டனர். நல்லுார், சோழீஸ்வரர் கோவில் முன் ஓடை கால்வாயாக மாறியுள்ளது. அதேநேரம், சிறிய மழை பெய்தாலும், மழைநீர் வெள்ளம் போல், பிளாஸ்டிக் கழிவுகளுடன் தேங்குகிறது. தண்ணீர் வழிந்தோட வழியில்லாமல் காங்கயம் ரோட்டில், ஓடையை தேடி கழிவுநீர் ஓடுவதும் வாடிக்கையாக உள்ளது. நெடுஞ்சாலைத்துறை, மாநகராட்சி இணைந்து அளவீடு செய்து, ஓடையை மீட்க வேண்டும்.

நல்லுார் மண்டல அலுவலகம் முன் உயர்மட்ட நடைமேம்பாலம் கட்டப்பட்டது. யாரும் பயன்படுத்துவதில்லை. குப்பை நிறைந்து, விளக்கு வெளிச்சமில்லாததால், பகலிலேயே விரும்பதகாத சம்பவங்கள் நடக்கிறது. மிக அருகிலேயே போலீஸ் ஸ்டேஷன் இருந்தும் இவ்வாறு நடப்பதாக அப்பகுதி மக்கள் குற்றம்சாட்டுகின்றனர்

உடனடி நடவடிக்கை எடுக்கிறேன்...

வார்டில் பொதுமக்கள் அவ்வப்போது கூறும் அத்தியாவசிய பிரச்னைக்கு முக்கியத்துவம் தரப்படுகிறது. பாதாள சாக்கடை பணி, 54 ரோடுகளில் நடந்து வருகிறது. பணி முழுமையாக முடிந்த பின் சாலை விரிவாக்கப்படும். ராக்கியாபாளைம் - செவந்தாம்பாளையம் இடையே புதிய தார் சாலை அமைக்கப்படும். அனைத்து வீதிகளுக்கும் தண்ணீர் செல்கிறதா, தாமதம் உள்ளதா என்பதை தினசரி விசாரிக்கிறேன். தெருவிளக்கு எரியவில்லை என வாட்ஸ்ஆப்பில், தகவல் சொல்கின்றனர். உடனுக்குடன் சரிசெய்து தருகிறோம். பாதாள சாக்கடை பணி முடிவடைந்த பகுதியில் தார்சாலை அமைக்க வேண்டும் என தொடர்ந்து மண்டல, மாமன்ற கூட்டத்தில் வலியுறுத்தி வருகிறேன். ராக்கியாபாளையம் - செவந்தாம்பாளையம் சாலையை சீரமைக்க வலியுறுத்தி ஆர்ப்பாட்டம் நடத்தினோம். வார்டில் சாலை சீரமைப்பு பணிக்கு முக்கியத்துவம் தர வேண்டும்.- விஜயலட்சுமி48வது வார்டு கவுன்சிலர்








      Dinamalar
      Follow us