/
உள்ளூர் செய்திகள்
/
திருப்பூர்
/
கோவில் முன்பு நிழற்கூரை கட்டுமான பணி துவங்கியது
/
கோவில் முன்பு நிழற்கூரை கட்டுமான பணி துவங்கியது
ADDED : செப் 05, 2025 11:40 PM

அனுப்பர்பாளையம்:
திருப்பூர் மாநகராட்சி, 20வது வார்டு ராமநாதபுரம் விரிவு இரண்டாவது வீதியில் மாரியம்மன் கோவில் அமைந்துள்ளது.
கோவிலின் முன் உயர் மட்ட நிழற்கூரை அமைக்க ம.தி.மு.க., பொதுச்செயலாளர் வைகோ தனது எம்.பி., தொகுதி மேம்பாட்டு நிதியில் இருந்து 13.75 லட்சம் ரூபாய் ஒதுக்கீடு செய்து இருந்தார். உயர் மட்ட நிழற்கூரை அமைப்பதற்கான பணி துவக்க விழா நேற்று காலை நடந்தது.
ம.தி.மு.க., மாநகர் மாவட்ட செயலாளர் நாகராஜ், தலைமை வகித்தார். கவுன்சிலர் குமார், முன்னிலை வகித்தார். துணை மேயர் பாலசுப்பிரமணியம், மாநகராட்சி இரண்டாவது மண்டல தலைவர் கோவிந்தராஜ், ஆகியோர் பணியை தொடங்கி வைத்தனர். அனைத்து கட்சி நிர்வாகிகள், ஊர் பொது மக்கள், கோவில் நிர்வாகிகள் உட்பட பலர் பங்கேற்றனர்.