/
உள்ளூர் செய்திகள்
/
திருப்பூர்
/
கட்டுமான பொருள் விலை உயர்வு கட்டுமான துறையினர் நாளை போராட்டம்
/
கட்டுமான பொருள் விலை உயர்வு கட்டுமான துறையினர் நாளை போராட்டம்
கட்டுமான பொருள் விலை உயர்வு கட்டுமான துறையினர் நாளை போராட்டம்
கட்டுமான பொருள் விலை உயர்வு கட்டுமான துறையினர் நாளை போராட்டம்
ADDED : டிச 11, 2024 08:26 AM
திருப்பூர் : தமிழ்நாடு மற்றும் புதுச்சேரி கட்டட பொறியாளர் சங்கங்களின் கூட்டமைப்பு மண்டல தலைவர் ஸ்டாலின் பாரதி கூறியதாவது:
தமிழகத்தில் கட்டுமானப் பொருட்கள் விலை, 30 சதவீதம் வரை திடீர் என உயர்ந்துள்ளது. எம்.சாண்ட், பி.சாண்ட், அனைத்து வகை ஜல்லிக்கற்கள் போன்றவை யூனிட்டுக்கு ஆயிரம் ரூபாய் உயர்த்தப்பட்டுள்ளது. விலை உயர்வை ஏற்றுக் கொள்ள வைக்கும் வகையில், சிண்டிகேட் அமைத்து நிறுவனங்கள் செயல்படுகின்றன.
இப்பிரச்னையால், கட்டுமானத் தொழில் பெரும் பாதிப்பைச் சந்திக்கும் அபாயம் ஏற்பட்டுள்ளது. இதை கண்டித்தும், மாநில அரசு இதில், தலையிட்டு உரிய நடவடிக்கை எடுக்க வலியுறுத்தியும், எங்கள் கூட்டமைப்பு சார்பில் நாளை (12ம் தேதி), மாநிலம் முழுவதும் ஒருநாள் அடையாள வேலை நிறுத்தமும், மாவட்ட தலைநகரங்களில் கண்டன ஆர்ப்பாட்டமும் நடத்துகிறோம். இவ்வாறு அவர் கூறினார்.