/
உள்ளூர் செய்திகள்
/
திருப்பூர்
/
கட்டட தொழிலாளர்கள் சங்கத்தினர் ஆர்ப்பாட்டம்
/
கட்டட தொழிலாளர்கள் சங்கத்தினர் ஆர்ப்பாட்டம்
ADDED : மார் 01, 2024 10:36 PM

உடுமலை;பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி, தமிழ்நாடு ஏ.ஐ.டி.யு.சி., கட்டட தொழிலாளர் சங்கம் சார்பில், உடுமலை காந்தி சதுக்கத்தில், ஆர்ப்பாட்டம் நடந்தது.
ஆர்ப்பாட்டத்துக்கு, மாவட்ட பொதுக்குழு உறுப்பினர் ராஜேந்திரன் தலைமை வகித்தார். காந்தி சதுக்க கிளை நிர்வாகிகள் முன்னிலை வகித்தனர். கோரிக்கைகளை வலியுறுத்தி, இ.கம்யூ., மாவட்ட நிர்வாக குழு உறுப்பினர் சுப்பிரமணியம், ஏ.ஐ.டி.யு.சி., மாநில பொதுக்குழு உறுப்பினர் சவுந்தர்ராஜன் பேசினர்.
ஆர்ப்பாட்டத்தில், 'கட்டுமான தொழிலாளர்களுக்கு, இ.எஸ்.ஐ., மருத்துவ காப்பீட்டு திட்டத்தை உடனடியாக அமல்படுத்த வேண்டும். பதிவு பெற்ற தொழிலாளர்களுக்கு, இலவச வீட்டு மனை பட்டா வழங்க வேண்டும். கட்டுமான தொழிலாளர்களுக்கு ஓய்வூதியத்தை, 6 ஆயிரம் ரூபாயாக உயர்த்த வேண்டும். கட்டுமான பெண் தொழிலாளர்களுக்கு, 50 வயதில் ஓய்வூதியம் வழங்க வேண்டும்,' உள்ளிட்ட கோரிக்கைகள் வலியுறுத்தப்பட்டன.

