/
உள்ளூர் செய்திகள்
/
திருப்பூர்
/
ரேஷன் கடை ஊழியர் ஊதிய நிர்ணயம் தொழிற்சங்கத்தினருடன் ஆலோசனை
/
ரேஷன் கடை ஊழியர் ஊதிய நிர்ணயம் தொழிற்சங்கத்தினருடன் ஆலோசனை
ரேஷன் கடை ஊழியர் ஊதிய நிர்ணயம் தொழிற்சங்கத்தினருடன் ஆலோசனை
ரேஷன் கடை ஊழியர் ஊதிய நிர்ணயம் தொழிற்சங்கத்தினருடன் ஆலோசனை
ADDED : ஜன 02, 2026 05:37 AM
திருப்பூர்: தமிழகத்தில் உள்ள ரேஷன் கடைகளில் பணியாற்றும் ஊழியர்கள் ஊதிய நிர்ணயம் குறித்து தொழிற்சங்க நிர்வாகிகளுடன் இன்று ஆலோசனை நடக்கிறது.
தமிழகம் முழுவதும் கூட்டுறவு துறை, நுகர்வோர் பண்டக சாலை, தொடக்க வேளாண் கூட்டுறவு சங்கம் உள்ளிட்டவற்றின் கீழ் ரேஷன் கடைகள் செயல்படுகின்றன. இவற்றில், பணியாற்றும் ஊழியர்களுக்கு ஊதியம் நிர்ணயிக்கப்பட்டு ஐந்தாண்டு ஆகிறது. புதிய ஊதிய நிர்ணயம் செய்ய குழு அமைக்க வேண்டும்; அதில் கூட்டுறவு சங்க ஊழியர் ஒரு உறுப்பினராக சேர்க்க வேண்டும் என கோரிக்கை விடுக்கப்பட்டிருந்தது.
இதனை வலியுறுத்தி ரேஷன் ஊழியர்கள் போராட்டம் நடத்திய நிலையில், கடந்த மாதம் ஊதிய நிர்ணயக் குழு அமைத்து அறிவிப்பு வெளியிடப்பட்டது. கூட்டுறவு துறை கூடுதல் பதிவாளர் (நுகர்வோர் பணிகள்) வீரப்பன் தலைமையில், 10 பேர் கொண்ட குழு ஏற்படுத்தப்பட்டது. இந்தக் குழு கூட்டம் இன்று, (2ம் தேதி) காலை 11:00 மணிக்கு கூட்டுறவு சங்கங்களின் பதிவாளர் அலுவலகத்தில் நடக்கிறது.
இதில், ஊதிய நிர்ணயம் குறித்த கருத்துகளை கேட்டு இக்குழு நடவடிக்கை மேற்கொள்ளும். கூட்டத்தில், பங்கேற்க தமிழகத்தில் உள்ள 21 கூட்டுறவு ஊழியர் சங்க நிர்வாகிகளுக்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது. இதில் விவாதிக்கப்படும் கருத்துகளின் அடிப்படையில், ஊதிய நிர்ணயக்குழு அறிக்கை தயாரித்து அரசுக்கு சமர்ப்பிக்கும்.

