ADDED : மார் 15, 2025 11:47 PM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
திருப்பூர்:உலக நுகர்வோர் தினம் முன்னிட்டு, நுகர்வோர் உரிமைகள் குறித்த விழிப்புணர்வு நிகழ்ச்சி, வஞ்சிபாளையத்தில் உள்ள தீரன் சின்னமலை மகளிர் கல்லுாரி வளாகத்தில் நடைபெற்றது.
விழாவில் முன்னதாக, கல்லுாரி நுகர்வோர் மன்ற ஒருங்கிணைப்பாளர் சந்திரகலா வரவேற்றார். கல்லுாரி முதல்வர் ரேச்சல் நான்சி பிலிப் தலைமை வகித்தார்.
நல்லுார் நுகர்வோர் மன்ற தலைவர் சண்முகசுந்தரம், செயலாளர் வேல்முருகன் ஆகியோர் நுகர்வோர் உரிமைகள் குறித்து பேசினர்.
உணவு பொருள் பாதுகாப்பு குறித்து உணவு பொருள் பாதுகாப்பு துறை அலுவலர் ஸ்டாலின் பிரபு பேசினார். இதில் கல்லுாரி பேராசிரியர்கள், மாணவியர் திரளாக கலந்து கொண்டனர்.