தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/உள்ளூர் செய்திகள்/திருப்பூர்/ 'பார்' திறக்க அனுமதிக்க கூடாது:  நுகர்வோர் அமைப்பு வேண்டுகோள் 

 'பார்' திறக்க அனுமதிக்க கூடாது:  நுகர்வோர் அமைப்பு வேண்டுகோள் 

 'பார்' திறக்க அனுமதிக்க கூடாது:  நுகர்வோர் அமைப்பு வேண்டுகோள் 


ADDED : ஏப் 07, 2026 11:23 PM

Follow on GoogleFavourite on Google

ADDED : ஏப் 07, 2026 11:23 PM


Follow on Google
அ நிறம் | அளவு

திருப்பூர்:திருப்பூர், கொங்கு மெயின் ரோடு பகுதியில் புதிய 'ஏசி' பார் அமைக்க அனுமதிக்க கூடாது என, நுகர்வோர் அமைப்பு தேர்தல் கமிஷனுக்கு வேண்டுகோள் விடுத்துள்ளது.

இது குறித்து, திருப்பூர் நுகர்வோர் நல முன்னேற்ற சங்கத்தின் சார்பில் தலைமை தேர்தல் கமிஷனர், மாநில தேர்தல் அலுவலர், திருப்பூர் மாவட்ட தேர்தல் அலுவலர் உள்ளிட்டோருக்கு அனுப்பிய மனு விவரம்:

திருப்பூர் வடக்கு சட்டசபை தொகுதிக்கு உட்பட்ட கொங்கு மெயின் ரோடு, எம்.எஸ்.நகர் பகுதியில், 10 ஆயிரம் சதுரடி பரப்பில் உள்ள ஒரு கட்டடத்தில் 'ஏசி பார்' அமைக்க பணிகள் நடக்கிறது. இந்த கட்டடத்துக்கு உரிய கட்டட அனுமதி இல்லை. மேலும், ஆபத்தான நிலையில் இங்கு மின் இணைப்பு வழங்கவும் மின்வாரியம் முயற்சி செய்து வருகிறது.

ஏற்கனவே இங்கு மின் இணைப்புகள் பயன்பாட்டில் இருந்து, அந்த கட்டடம் இடித்து அகற்றிய நிலையில் அந்த இணைப்புகள் துண்டிக்கப்பட்டன. தற்போது எந்த முறையான அனுமதி மற்றும் உரிய பாதுகாப்பான கட்டடம் இல்லாத நிலை உள்ளது இங்கு மின் இணைப்பு வழங்குவதும் விதிகளுக்குப் புறம்பானது. 'பார்' அமைந்தால் பல்வேறு பிரச்னை மற்றும் அவதியும் அதிகரிக்கும். எனவே, பொதுமக்களின் நலனை கருத்தில் கொண்டு, 'பார்' அமைக்கும் திட்டம், மின் இணைப்பு வழங்கும் பணி ஆகியன நிறுத்தப்பட வேண்டும்.

இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us