/
உள்ளூர் செய்திகள்
/
திருப்பூர்
/
கன்டெய்னர் லாரி 'யு டர்ன்'; வாகன ஓட்டிகள் அதிர்ச்சி
/
கன்டெய்னர் லாரி 'யு டர்ன்'; வாகன ஓட்டிகள் அதிர்ச்சி
கன்டெய்னர் லாரி 'யு டர்ன்'; வாகன ஓட்டிகள் அதிர்ச்சி
கன்டெய்னர் லாரி 'யு டர்ன்'; வாகன ஓட்டிகள் அதிர்ச்சி
ADDED : பிப் 18, 2025 11:52 PM

பல்லடம்; தேசிய நெடுஞ்சாலை விரிவாக்க பணியின் ஒரு பகுதியாக, பல்லடம், அண்ணா நகரில், ரோட்டின் மட்டம் உயர்த்தப்பட்டுள்ளது. ஏற்கனவே உள்ள மைய தடுப்பு சுவருக்கு இணையாக ரோடு உயர்த்தப்பட்டது.
நேற்று, வாகன போக்குவரத்து நிறைந்த இப்பகுதியில், கன்டெய்னர் லாரி ஒன்று, மைய தடுப்பை கடந்து, 'யு டர்ன்' எடுத்தது. இதனால், எதிர் திசையிலும், கன்டெய்னர் லாரி பின்னால் வந்த வாகனங்களுக்கும் இடையூறு ஏற்பட்டது.
தேசிய நெடுஞ்சாலை என்பதால், விபத்து அபாயத்தை கருத்தில் கொண்டு, இது போன்ற சாகசங்களை தடுக்க வேண்டிய கட்டாயம் உள்ளது. இங்குள்ள மைய தடுப்புகளை புதுப்பித்து, தேவையான இடங்களில் மட்டும் இடைவெளி விட, தேசிய நெடுஞ்சாலை துறை அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.