/
உள்ளூர் செய்திகள்
/
திருப்பூர்
/
தொடர் மழை: விவசாயிகள் மகிழ்ச்சி
/
தொடர் மழை: விவசாயிகள் மகிழ்ச்சி
ADDED : அக் 13, 2024 11:27 PM

பல்லடம்,: பல்லடம் வட்டாரத்தில், தொடர்ச்சியாக மழை பெய்து வருவதால், விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்து வருகின்றனர்.
பல்லடம் வட்டாரத்தில், விவசாயத் தொழில் பிரதானமாக உள்ளது. தென்னை, வாழை, சோளம், மக்காச்சோளம் உள்ளிட்ட நீண்ட கால பயிர்கள் மற்றும் தக்காளி, வெங்காயம், வெண்டைக்காய், புடலங்காய், பாகற்காய் உள்ளிட்ட காய்கறி பயிர்கள் உள்ளிட்டவை பரவலாக சாகுபடி செய்யப்படுகின்றன.
பருவமழை மற்றும் பி.ஏ.பி., நீர்ப்பாசனத்துக்கு கை கொடுக்கிறது. ஆண்டுக்கு, சராசரியாக, 500 மி.மீ., மழை பதிவாகின்றது. நடப்பு ஆண்டு, தென்மேற்கு பருவமழை எதிர்பார்த்த அளவு கிடைக்கவில்லை. சராசரியைக் காட்டிலும் குறைந்த அளவே பதிவான நிலையில், விவசாயிகள் கவலையில் ஆழ்ந்திருந்தனர். போதிய பருவ மழை கிடைத்தால் தான், உழவுப் பணி மேற்கொள்வதுடன், எதிர்வரும் நாட்களில் தண்ணீர் தட்டுப்பாடு இல்லாத சூழல் இருக்கும் என்ற நிலை உள்ளது.
விவசாயிகளின் இந்த எதிர்பார்ப்பை பூர்த்தி செய்யும் விதமாக, கடந்த சில தினங்களாக, பல்லடம் வட் டாரத்தில் தொடர்ச்சியாக மழை பெய்து வருகிறது. இதனால், குளம், குட்டைகள் மற்றும் நீர் நிலைகளில் தண்ணீர் வரத்து அதிகரித்து வருகிறது. இதையடுத்து, விவசாயிகள், மகிழ்ச்சியுடன் உழவுப் பணியில் ஆர்வம் காட்டத் துவங்கி உள்ளனர்.