/
உள்ளூர் செய்திகள்
/
திருப்பூர்
/
வீடுகளுக்கு சாக்கடை மூடி ஒப்பந்த ஊழியர்கள் 'சுறுசுறு'
/
வீடுகளுக்கு சாக்கடை மூடி ஒப்பந்த ஊழியர்கள் 'சுறுசுறு'
வீடுகளுக்கு சாக்கடை மூடி ஒப்பந்த ஊழியர்கள் 'சுறுசுறு'
வீடுகளுக்கு சாக்கடை மூடி ஒப்பந்த ஊழியர்கள் 'சுறுசுறு'
ADDED : செப் 23, 2025 11:55 PM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
திருப்பூர்; திருப்பூர் மாநகராட்சி 46வது வார்டுக்கு உட்பட்ட காஞ்சி நகர் உள்ளிட்ட பகுதிகளில் சமீபத்தில் பாதாள சாக்கடைக்கு இணைப்பு வழங்கும் பணி நடந்தது. இதற்காக, குழாய் பதித்து சேம்பர் அமைக்கப்படுகிறது. இதன் மீது அமைக்கப்படும் மூடிகளை பணி செய்யும் ஒப்பந்ததாரர் வழங்க வேண்டும்.
ஆனால், மூடிகளை வழங்காமல், கடைகளில் புதிய மூடிகளை வீட்டு உரிமையாளர் செலவில் வாங்கிப் பொருத்தியுள்ளனர். இது குறித்த செய்தி 'தினமலர்' நாளிதழில் வெளியானது. இதனால், பணி செய்த ஒப்பந்த நிறுவன ஊழியர்கள் மூடிகளை கொண்டு வந்து கொடுத்துள்ளனர்.