தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/உள்ளூர் செய்திகள்/திருப்பூர்/ கான்ட்ராக்டர் வகைப்பாடு மாற்றம்:கலந்தாய்வு நடத்த எதிர்பார்ப்பு

கான்ட்ராக்டர் வகைப்பாடு மாற்றம்:கலந்தாய்வு நடத்த எதிர்பார்ப்பு

கான்ட்ராக்டர் வகைப்பாடு மாற்றம்:கலந்தாய்வு நடத்த எதிர்பார்ப்பு


UPDATED : செப் 24, 2026 09:10 PM

ADDED : செப் 24, 2026 08:52 PM

Follow on GoogleFavourite on Google

UPDATED : செப் 24, 2026 09:10 PM ADDED : செப் 24, 2026 08:52 PM


Follow on Google
அ நிறம் | அளவு

திருப்பூர்: 'பொதுப்பணித்துறையில் கான்ட்ராக்டர்களின் வகைப்பாடு, ஆறு அடுக்கிலிருந்து நான்கு அடுக்காக மாற்றும் முன்மொழிவை இறுதி செய்யும் முன், கான்ட்ராக்டர்களுடன் கலந்தாய்வு நடத்த வேண்டும்' என, கட்டுமான பொறியாளர்கள் வலியுறுத்தியுள்ளனர்.

கட்டுமான பொறியாளர்கள் கூறியதாவது:

பொதுப்பணித்துறையில், 2026-2027-ம் நிதியாண்டிற்காக நடைமுறையில் உள்ள கான்ட்ராக்டர்களின் ஆறு அடுக்கு வகைப்பாடு முறையை 4 அடுக்காக மாற்றுவது, பண மதிப்பு வரம்புகளை திருத்துவது மற்றும் பதிவு விதிமுறைகளில் மாற்றம் செய்வது குறித்து அரசு பரிசீலித்து வருகிறது.

கட்டுமானத் துறையில் நீண்டகாலமாக செயல்பட்டு வரும் கான்ட்ராக்டர்களின் அனுபவங்கள் மற்றும் கருத்துகளைப் பெற்ற பின்னரே இத்தகைய மாற்றங்களை இறுதி செய்ய வேண்டும். புதிய நான்கு அடுக்கு வகைப்பாடு, பண மதிப்பு வரம்புகள், ஏற்கனவே பதிவு செய்துள்ள கான்ட்ராக்டர்களின் வகைப்பாடு தொடர்பாகவும், நிலுவையில் உள்ள விண்ணப்பங்கள் குறித்தும் கான்ட்ராக்டர்களின் பிரதிநிதிகளுடன் விரிவாக விவாதிக்க வேண்டும். இதன் மூலம் நடைமுறைச் சிக்கல்கள், பாதிப்புகளை கண்டறிந்து உரிய தீர்வு காண முடியும்.

கான்ட்ராக்டர்களின் நிதித்திறனை நிரூபிக்க, தற்போது நடைமுறையில் உள்ள 'நிதித்திறன் சான்றிதழ்' முறையையே தொடர வேண்டும். அதற்குப் பதிலாக மின்னணு வங்கி உத்தரவாதம் அல்லது வங்கி உத்தரவாத முறையை கட்டாயமாக்குவதன் மூலம், சிறிய மற்றும் நடுத்தர கான்ட்ராக்டர்களுக்கு கூடுதல் நிதிச்சுமை, நெருக்கடி ஏற்படும்.

எனவே, இந்த முன்மொழிவை அரசு இறுதி செய்வதற்கு முன், பொதுப்பணித்துறையில் பதிவு பெற்ற அனைத்துப் பிரிவு கான்ட்ராக்டர்கள், அவர்களின் பிரதிநிதிகளை அழைத்து கலந்தாய்வு கூட்டம் நடத்த வேண்டும்.

இவ்வாறு, அவர்கள் கூறினர்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us