/
உள்ளூர் செய்திகள்
/
திருப்பூர்
/
கொசுத்தொல்லையை கட்டுப்படுத்துங்க
/
கொசுத்தொல்லையை கட்டுப்படுத்துங்க
ADDED : நவ 20, 2024 10:20 PM
உடுமலை; உடுமலை நகரில் அதிகரித்து வரும் கொசுத்தொல்லையை கட்டுப்படுத்த, புகை மருந்து அடிப்பதை தீவிரப்படுத்த வேண்டுமென கோரிக்கை விடுத்துள்ளனர்.
உடுமலை நகரில் 33 வார்டுகள் உள்ளன. தற்போது பருவநிலை மாற்றத்தால் அனைத்து பகுதிகளிலும் கொசுத்தொல்லை அதிகரித்துள்ளது. மேலும், பல பகுதிகளில் மழைநீர் தேங்கியிருப்பதால், கொசுப்புழு உற்பத்தியும் அதிகரித்துள்ளது.
இதனால் மாலை நேரங்களில், பொதுமக்கள் நிம்மதியாக வெளியில் செல்ல முடியாமல் வீட்டிற்குள் முடங்குகின்றனர். வீடுகளிலும் காலை நேரங்களிலும் கொசுத் தொல்லை இருப்பதால், குழந்தைகள் நோய்பாதிப்புக்கும் ஆளாகின்றனர்.
கொசுத்தொல்லையை கட்டுப்படுத்தவும், நோய்த்தடுப்பு நடவடிக்கையாகவும், நகரில் புகைமருந்து அடிப்பதை சுகாதாரத்துறையினர் தீவிரப்படுத்த வேண்டுமென, பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

