ADDED : பிப் 13, 2024 01:14 AM

நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
பொங்கலுார் ஒன்றியம், மீனாட்சி வலசு பகுதியிலுள்ள ஒரு கம்பெனி அருகே, சிவன்மலை நகர் உள்ளது.
இது சிவன்மலை ஊராட்சிக்கு உட்பட்ட பகுதி. அப்பகுதியில், ஏராளமான மரங்கள் தன்னிச்சையாக வளர்ந்து இருந்தன. அவற்றில், பத்துக்கும் மேற்பட்ட மரங்களை, வருவாய்த்துறையினரிடம் எந்த அனுமதியும் பெறாமல் தனிநபர்கள் வெட்டி கடத்தியுள்ளனர். இது பொதுமக்கள் மத்தியில் கடும் அதிருப்தியை ஏற்படுத்தி உள்ளது. விதிமுறை மீறலில் ஈடுபடுபவர் மீது கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று பொதுமக்கள், கலெக்டரிடம் வேண்டுகோள் விடுத்துள்ளனர்.