/
உள்ளூர் செய்திகள்
/
திருப்பூர்
/
கூட்டுறவு வங்கி காலியிடம் நிரப்ப நடவடிக்கை
/
கூட்டுறவு வங்கி காலியிடம் நிரப்ப நடவடிக்கை
ADDED : ஆக 01, 2025 10:54 PM
திருப்பூர்; மாநிலம் முழுவதும் கூட்டுறவு வங்கி உள்ளிட்ட நிறுவனங்களில் உள்ள உதவியாளர் காலிப்பணியிடங்களுக்கு ஆட்கள் தேர்வு செய்ய உத்தரவிடப்பட்டுள்ளது.
கூட்டுறவு சங்கங்களின் பதிவாளர் நந்தகுமார், கூட்டுறவு மண்டல இணை பதிவாளர்களுக்கு அனுப்பிய கடிதம்:
அனைத்து மாவட்ட மத்திய கூட்டுறவு வங்கிகள், தொடக்க வேளாண் கூட்டுறவு சங்கங்கள் ஆகியவற்றில் உள்ள உதவியாளர் காலிப் பணியிடங்கள் நிரப்ப மாவட்ட ஆள் சேர்ப்பு மையம் வாயிலாக நடவடிக்கை எடுக்க வேண்டும்.
அதற்காக பொதுப்பணித்திறன் அடிப்படையில் வழங்க வேண்டிய பதவி உயர்வுகள் வழங்கப்பட்ட பின், காலிப்பணியிடம் நிரப்ப வேண்டும்.
அதையடுத்து கீழ் நிலைப்பணியிடம் நிரப்ப வேண்டும். அதன் பின்னரே, உதவியாளர் காலிப்பணியிடம் கணக்கிட வேண்டும்.
அவ்வகையில், மாவட்ட ஆள் சேர்ப்புமையம் சார்பில், காலிப்பணியிட விவரம் மாவட்ட அளவில் பெறப்பட்டு, வரும் 4ம் தேதி, மாவட்ட ஆள் சேர்ப்பு குழு கூட்டம் நடத்த வேண்டும்.
இதுகுறித்துவரும் 6ம் தேதி பொது அறிவிப்பு வெளியிட்டு, 29ம் தேதிக்குள் விண்ணப்பம் பெறப்பட வேண்டும்.
செப்., 3ம் தேதி தேர்வு மையங்கள் முடிவு செய்து, 5ம் தேதி ஹால் டிக்கெட் வினியோகித்து, அக்., 12ம் தேதி எழுத்து தேர்வு நடத்தி 27ம் தேதி முடிவுகள் வெளியிட வேண்டும்.
தேர்ச்சி பெற்றவர் களுக்கு, நேர்காணலுக்கான ஹால் டிக்கெட், 31ம் தேதி வினியோகிக்க வேண்டும். நேர்காணல் நவ., 12 முதல் 14 ம் தேதி வரை நடத்தி, அம்மாதம் 15ம் தேதி அதன் முடிவுகள் வெளியிட வேண்டும்.
இவ்வாறு அதில் கூறியுள்ளார்.