/
உள்ளூர் செய்திகள்
/
திருப்பூர்
/
கூட்டுறவு சங்க பணியாளர்கள் மூன்றாவது நாளாக போராட்டம்
/
கூட்டுறவு சங்க பணியாளர்கள் மூன்றாவது நாளாக போராட்டம்
கூட்டுறவு சங்க பணியாளர்கள் மூன்றாவது நாளாக போராட்டம்
கூட்டுறவு சங்க பணியாளர்கள் மூன்றாவது நாளாக போராட்டம்
ADDED : அக் 08, 2025 11:18 PM

உடுமலை; தொடக்க வேளாண் கூட்டுறவு சங்க பணியாளர்கள் மற்றும் ரேஷன் ஊழியர்கள் தொடர் வேலை நிறுத்தம் காரணமாக பொதுமக்கள் பாதித்துள்ளனர்.
உடுமலை, மடத்துக்குளம், குடிமங்கலம் தாலுகாவிலுள்ள, தொடக்க வேளாண் கூட்டுறவு சங்கம், நகர கூட்டுறவு சங்கம் மற்றும் ரேஷன் கடைகளில் பணியாற்றும் ஊழியர்கள், பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி, மூன்றாவது நாளாக நேற்றும் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.
இதனால், கூட்டுறவு சங்கத்தில் பல்வேறு பணிகள் பாதித்துள்ளதோடு, ரேஷன் பொருட்கள் வாங்க முடியாமல் மக்கள் பாதித்து வருகின்றனர். மேலும், தாயுமானவர் திட்டத்தின் கீழ், வீடுகள் தோறும் சென்று, முதியவர்கள், மாற்றுத்திறனாளிகளுக்கு ரேஷன் பொருட்கள் வினியோக பணியும் பாதித்துள்ளது. கோரிக்கைகளை வலியுறுத்தி, குடிமங்கலம் ஒன்றியத்தில் மாவட்ட செயலாளர் முருகானந்தம் தலைமையிலும், மடத்துக்குளத்தில், மாவட்ட தலைவர் சாமியப்பன் தலைமையிலும் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இதில் பணியாளர்கள் கலந்து கொண்டனர்.