/
உள்ளூர் செய்திகள்
/
திருப்பூர்
/
கூட்டுறவு ஊழியர் போராட்டம்; ரேஷன் கடைகள் அடைப்பு
/
கூட்டுறவு ஊழியர் போராட்டம்; ரேஷன் கடைகள் அடைப்பு
ADDED : ஜூன் 27, 2025 11:59 PM

திருப்பூர்; ரேஷன் கடைகளில் எடை போடும் நடைமுறையில் உள்ள சிக்கல்களை களைதல் உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி, ஊழியர்கள் நேற்று ஒரு நாள் வேலை நிறுத்தம் மற்றும் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
ரேஷன் கடைகளில் தற்போது 'புளுடூத்' இணைப்புடன் கூடிய எலக்ட்ரானிக் தராசு வாயிலாக, பொருள் வழங்குவதில் உள்ள பிரச்னைகளை தீர்க்க நடவடிக்கை எடுக்க வேண்டும், கடைகளில் எடையாளர் நியமிக்க வேண்டும்.
பணி மூப்பு அடிப்படையில் ஊழியர்களுக்கு பதவி உயர்வு வழங்க வேண்டும். சொந்த ஊரில் பணியமர்த்த வேண்டும் என்பது உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகள் ரேஷன் ஊழியர்களால் முன் வைக்கப்பட்டுள்ளது. இதனை வலியுறுத்தி நேற்று தமிழகம் முழுவதும் ஒரு நாள் வேலை நிறுத்தம் மற்றும் கலெக்டர் அலுவலகம் முன் ஆர்ப்பாட்டம் ஆகியன நடத்தப்பட்டது.
அவ்வகையில் திருப்பூர் மாவட்ட தொடக்க வேளாண் கூட்டுறவு வங்கி அனைத்து பணியாளர் சங்கம் சார்பில், போராட்டம் நடந்தது.
ரேஷன் கடைகளை அடைத்து ஊழியர்கள் கலந்து கொண்டனர். திருப்பூர் கலெக்டர் அலுவலகம் முன் நடந்த ஆர்ப்பாட்டத்துக்கு சங்க மாவட்ட தலைவர் சாமியப்பன் தலைமை வகித்தார். செயலாளர் முருகானந்தம், பொருளாளர் உதயகுமார் முன்னிலை வகித்தனர்.
இதில், பங்கேற்ற ஊழியர்கள் கோரிக்கைகளை வலியுறுத்தி கோஷமிட்டு, கலெக்டரிடம் மனு அளித்தனர்.