sub-imageடைம்லைன்
sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

திங்கள், மார்ச் 30, 2026 ,பங்குனி 16, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

திருப்பூர்

/

 விற்பனை கூடத்தில் கொப்பரை ஏலம் கிலோ ரூ. 210 விற்பனை

/

 விற்பனை கூடத்தில் கொப்பரை ஏலம் கிலோ ரூ. 210 விற்பனை

 விற்பனை கூடத்தில் கொப்பரை ஏலம் கிலோ ரூ. 210 விற்பனை

 விற்பனை கூடத்தில் கொப்பரை ஏலம் கிலோ ரூ. 210 விற்பனை


ADDED : டிச 19, 2025 07:08 AM

Google News

ADDED : டிச 19, 2025 07:08 AM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

உடுமலை: உடுமலையில், இ-நாம் திட்டத்தின் கீழ் நடந்த கொப்பரை ஏலத்தில், அதிக பட்சமாக ஒரு கிலோ ரூ.210க்கு விற்பனையானது.

உடுமலை ஒழுங்கு முறை விற்பனைக்கூடத்தில், இ-நாம் திட்டத்தின் கீழ் வாரந்தோறும் வியாழக்கிழமைகளில், கொப்பரை ஏலம் நடந்து வருகிறது.

நேற்று நடந்த கொப்பரை ஏலத்திற்கு, 13 விவசாயிகள், 52 மூட்டை கொப்பரை விற்பனைக்கு கொண்டு வந்திருந்தனர்.

இ-நாம் திட்டத்தின் கீழ், நேற்று நடந்த மறைமுக ஏலத்தில், 7 நிறுவனங்கள் மற்றும் வியாபாரிகள் பங்கேற்றனர்.

அன் சல்பர் கொப்பரை கிலோ, ரூ.184 முதல், ரூ.210 வரை விற்பனையானது. முதல் தரம், ரூ.160.20 முதல், ரூ.181 வரையும், இரண்டாம் தரம், ரூ.86.80 முதல், ரூ.131.16 வரையும், இணையதளத்தில் விலை நிர்ணயம் செய்யப்பட்டு, ஏலம் இறுதி செய்யப்பட்டது.

உடுமலை ஒழுங்கு முறை விற்பனை கூடத்தில் நடக்கும் இ-நாம் திட்ட ஏலத்தில், கொப்பரை முறையாக தரம் பிரித்து, ஏலத்திற்கு பட்டியலிடப்படுவதால், விவசாயிகளுக்கும் கூடுதல் விலை கிடைக்கிறது.

இ-நாம் திட்டத்தின் இடைத்தரகர்கள் இல்லாமல், விவசாய விளைபொருளுக்கு உரிய விலை கிடைப்பதோடு, கொள்முதல் செய்யப்படும் தொகை உடனடியாக விவசாயிகள் வங்கிக்கணக்கில் வரவு வைக்கப்படுகிறது.

எனவே, விவசாயிகள் இந்த வசதியை பயன்படுத்திக்கொள்ள வேண்டும், என திருப்பூர் விற்பனை குழு முதுநிலை செயலாளர் சண்முக சுந்தரம், ஒழுங்கு முறை விற்பனை கூட கண்காணிப்பாளர் செந்தில்குமார் தெரிவித்தனர்.

விடுமுறையால் ஏலம் மாற்றம்

ஒழுங்குமுறை விற்பனைக்கூடத்தில், வாரந்தோறும் வியாழக்கிழமைகளில், கொப்பரை ஏலம் நடந்து வரும் நிலையில்,வரும், 25 மற்றும் ஜன., 1ம் தேதி அரசு விடுமுறை நாட்களாக உள்ளதால், முறையே, 24 மற்றும் 31 ஆகிய தேதிகளில் (புதன் கிழமை) ஒழுங்கு முறை விற்பனைக்கூடத்தில் கொப்பரை ஏலம் நடக்கும் என அறிவிக்கப்பட்டுள்ளது.








      Dinamalar
      Follow us