தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/உள்ளூர் செய்திகள்/திருப்பூர்/ கொப்பரை ஏலம் ரூ. 231 அதிகபட்சம்

கொப்பரை ஏலம் ரூ. 231 அதிகபட்சம்

கொப்பரை ஏலம் ரூ. 231 அதிகபட்சம்


ADDED : செப் 11, 2025 09:29 PM

Follow on GoogleFavourite on Google

ADDED : செப் 11, 2025 09:29 PM


Follow on Google
அ நிறம் | அளவு

உடுமலை; உடுமலை ஒழுங்கு முறை விற்பனை கூடத்தில் நடந்த ஏலத்தில், கொப்பரைக்கு, அதிகபட்சமாக 231 ரூபாய் வரை விலை கிடைத்தது.

உடுமலை ஒழுங்கு முறை விற்பனை கூடத்தில், வாரந்தோறும் வியாழக்கிழமைகளில், இ-நாம் திட்டத்தின் கீழ், கொப்பரை ஏலம் நடக்கிறது. நேற்று நடந்த ஏலத்தில், 17 விவசாயிகள்; 9 வியாபாரிகள் பங்கேற்றனர்.

மொத்தம், 4,550 கிலோ கொப்பரை ஏலம் விடப்பட்டது; வர்த்தகத்தின் மொத்த மதிப்பு, 8 லட்சத்து 59 ஆயிரத்து 703 ரூபாயாகும்.

ஏலத்தில், கொப்பரை கிலோவுக்கு, முதல் தரம் 216 ரூபாய் முதல் 231 ரூபாய் வரையும், இரண்டாம் தரம் 152.76 முதல் 205 ரூபாய் வரை விலை கிடைத்தது.

வாரந்தோறும் நடக்கும் ஏலத்தில் பங்கேற்று பயன்பெற திருப்பூர் விற்பனை குழு சார்பில் விவசாயிகளுக்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.

மேலும் விபரங்களுக்கு, விற்பனை கூட கண்காணிப்பாளரை, 9443962834 என்ற மொபைல் எண்ணில் தொடர்பு கொள்ளலாம்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us