/
உள்ளூர் செய்திகள்
/
திருப்பூர்
/
மாநகராட்சி பட்ஜெட் நாளை தாக்கல்
/
மாநகராட்சி பட்ஜெட் நாளை தாக்கல்
ADDED : மார் 26, 2025 11:31 PM
திருப்பூர்; திருப்பூர் மாநகராட்சி பட்ஜெட் நாளை தாக்கல் செய்யப்பட உள்ளது.
திருப்பூர் மாநகராட்சி நிர்வாகம் சார்பில், ஒவ்வொரு நிதி ஆண்டும் பட்ஜெட் தாக்கல் செய்யப்படுவது வழக்கம். அதில், மாநகரில் செயல்படுத்தப்பட்டு வரும் திட்டங்களின் நிலை, செயல்படுத்தப்பட உள்ள புதிய திட்டங்கள், ஸ்மார்ட் சிட்டி திட்ட பணிகள், குடிநீர் திட்டங்கள், மாநகராட்சியின் வரவு - செலவு உள்ளிட்ட பல்வேறு விஷயங்கள் இடம் பெற்றிருக்கும்.
வரும் நிதியாண்டுக்கான (2025 - 26) மாநகராட்சி பட்ஜெட் மாநகராட்சி கூட்ட அரங்கில் நாளை காலை, 10:30 மணிக்கு தாக்கல் செய்யப்படுகிறது. மாநகராட்சி பட்ஜெட் குறித்து பொதுமக்களிடம் கருத்து கேட்கப்படுவது வழக்கம். இந்த முறை கேட்கப்படாதது குறித்து, 'தினமலர்' நாளிதழில் கடந்த, 24ம் தேதி செய்தி வெளியானது. அதன் எதிரொலியாக, கருத்துகளை தெரிவிக்கலாம் என்று அறிவிக்கப்பட்டது. நேற்று மாலையுடன் கருத்து பெறுவது நிறைவு பெற்றது. கருத்துகேட்புக்கு குறைவான அவகாசமே வழங்கப்பட்டது. இதனால், பொதுமக்கள் தங்கள் கருத்துகளை தெரிவிக்க முடியாமல் போனதாக பலரும் கூறி வருகின்றனர்.