/
உள்ளூர் செய்திகள்
/
திருப்பூர்
/
மாநகராட்சி குப்பை விவகாரம் 28ல் கடையடைப்பு திட்டம்
/
மாநகராட்சி குப்பை விவகாரம் 28ல் கடையடைப்பு திட்டம்
மாநகராட்சி குப்பை விவகாரம் 28ல் கடையடைப்பு திட்டம்
மாநகராட்சி குப்பை விவகாரம் 28ல் கடையடைப்பு திட்டம்
ADDED : அக் 26, 2025 03:00 AM
பல்லடம்: - கட்சி சார்பற்ற தமிழக விவசாயிகள் சங்கத்தின் மாநில ஊடகப்பிரிவு செயலாளர் ஈஸ்வரன் கூறியதாவது:
பல கோடி ரூபாய் வருமானம் ஈட்டும் திருப்பூர் மாநகராட்சியில், பல ஆண்டுகளாக குப்பை மேலாண்மை மேற்கொள்ளப்படவில்லை. அதிகரித்த பிளாஸ்டிக் மற்றும் நெகிழி பைகளின் பயன்பாடு மற்றும் திடக்கழிவு மேலாண்மையை முறையாக பின்பற்றாததாலும், பாறைக்குழிகள், நீர் நிலைகள் மற்றும் பயன்பாடற்ற கிணறுகளில் குப்பைகளைக் கொட்டி, மாநகராட்சி நிர்வாகம் சுற்றுச்சூழலை மாசுபடுத்தி வருகிறது.
இதை தடுக்க வேண்டிய மாவட்ட நிர்வாகம், மாசுக்கட்டுப்பாடு வாரியம், உள்ளாட்சி அமைப்புகள் வேடிக்கை பார்த்து வருகின்றன. ஒவ்வொரு கிராமமாக குப்பை வண்டிகளுடன் சென்று, விவசாயத்தை அழிக்க நினைக்கும் முயற்சியில் மாநகராட்சி ஈடுபட்டுள்ளது.
பல்வேறு கிராமங்களில் எதிர்ப்பு கிளம்பியதைத் தொடர்ந்து, விவசாயத் தொழில் மிகுந்த இடுவாய் கிராமத்தில், குப்பை கிடங்கு அமைக்க மாநகராட்சி தீர்மானித்துள்ளது.
அடக்கு முறையால் சிலரை கைது செய்து விட்டால், பணிகளை மேற்கொண்டு விடலாம் என மாநகராட்சி கருதுகிறது. மாநகராட்சியின் இச்செயலால், இடுவாய் கிராமம் மட்டுமன்றி, அருகிலுள்ள கிராமங்களிலும் நிலத்தடி நீர்,விவசாயம் கடுமையாக பாதிக்கப்படும்.
எனவே, மாநகராட்சியின் இந்த நடவடிக்கையை கண்டித்து,நேற்று இடுவாய் கிராமத்தில் கடையடைப்பு நடத்த முடிவு செய்யப்பட்டது.
அருகிலுள்ள ஆறுமுத்தாம்பாளையம், 63 வேலம்பாளையம் கிராம மக்களும் இதற்கு ஆதரவு தெரிவித்ததால், இன்று (நேற்று) கடையடைப்பு ரத்து செய்யப்பட்டது.
வரும், 28ம் தேதி அன்று இம்மூன்று ஊராட்சிகளிலும் முழுமையான கடையடைப்பு நடத்த தீர்மானிக்கப்பட்டுள்ளது. இதற்கு முன், இப்பிரச்னை தொடர்பாக நாளை கோர்ட்டில் மனுதாக்கல் செய்யப்படும்.
இவ்வாறு அவர் கூறினார்.

