ADDED : பிப் 01, 2024 12:07 AM

நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
கடந்தாண்டு பள்ளிக்கல்வித்துறை நடத்திய மாநில கலைத்திருவிழாவில் வெற்றி பெற்ற மாணவ, மாணவியருக்கு பரிசளிப்பு விழா சென்னையில் கடந்த 30ம் தேதி நடந்தது. அமைச்சர் மகேஷ், கும்மி நடனத்தில் (ஆறு முதல் எட்டாம் வகுப்பு பிரிவில்) முதலிடம் பெற்ற, 15 வேலம்பாளையம், மாநகராட்சி நடுநிலைப்பள்ளி மாணவியருக்கு முதல் பரிசு, சான்றிதழ் வழங்கினார்.
மாநில போட்டியில் பங்கேற்று, முதலிடம் பெற்ற எட்டாம் வகுப்பு கனிஷ்கா, பிரகதி, உத்திரக்குமாரி, காயத்ரி, கீர்த்தனா, காவியாஸ்ரீ, தனுஸ்ரீ, பிருந்தா மற்றும் ஆசிரிய பயிற்சியாளர் ரேவதி ஆகியோரை பள்ளி தலைமை ஆசிரியர் ராதாமணி, பெற்றோர் ஆசிரியர் கழக நிர்வாகிகள், பள்ளி மேலாண்மை குழு உறுப்பினர் உட்பட பலரும் பாராட்டினர்.