sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வெள்ளி, அக்டோபர் 03, 2025 ,புரட்டாசி 17, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

திருப்பூர்

/

சொத்து வரி செலுத்த மாநகராட்சி அழைப்பு

/

சொத்து வரி செலுத்த மாநகராட்சி அழைப்பு

சொத்து வரி செலுத்த மாநகராட்சி அழைப்பு

சொத்து வரி செலுத்த மாநகராட்சி அழைப்பு


ADDED : அக் 19, 2024 11:41 PM

Google News

ADDED : அக் 19, 2024 11:41 PM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

திருப்பூர்: திருப்பூர் மாநகராட்சி கமிஷனர் (பொறுப்பு) சுல்தானா அறிக்கை: மாநகராட்சி பகுதியில் சொத்து வரி செலுத்துவோர் இரண்டாம் அரையாண்டுக்கான சொத்து வரியை அக்., 31 ம் தேதிக்குள் செலுத்தி, 5 சதவீத சலுகையைப் பெற்றுக் கொள்ளலாம்.

மாநகராட்சியில் சொத்து வரி மற்றும் கட்டணங்களை, நேரடியாக திங்கள் முதல் சனிக்கிழமை வரை, வேலை நாட்களில் காலை 9:30 முதல் மாலை 5:00 மணி வரை செலுத்தலாம். மாநகராட்சி மைய அலுவலகம், நான்கு மண்டல அலுவலகங்கள்; குமரன் வணிக வளாகம், செட்டிபாளையம், தொட்டிபாளையம், நெருப் பெரிச்சல், மண்ணரை, முத்தணம்பாளையம், வீரபாண்டி, முருகம்பாளையம், பாண்டியன் நகர் ஆகிய வரி வசூல் மையங்களில் நேரடியாக செலுத்தலாம்.

ஆன்லைன் வாயிலாக, https://tnurbanepay.tn.gov.in என்ற இணைய தள முகவரியில் செலுத்தவும் வசதி ஏற்படுத்தப்பட்டுள்ளது. மேலும், நேரடியாக வரும் வரி வசூல் பணியாளர்களிடமும், மையங்களிலும், ஏ.டி.எம்., மற்றும் கிரடிட் கார்டு, கியூ ஆர் கோடு ஸ்கேன் வாயிலாகவும் செலுத்தலாம். டிஜிட்டல் பரிவர்த்தனையில் வங்கி கணக்கிலும் செலுத்தலாம்.

n மாநகராட்சி பகுதியில், கடந்த மற்றும் நடப்பு நிதியாண்டுகளில், 1.73 லட்சம் பேர் தங்கள் சொத்து வரியை செலுத்தி, 1.7 கோடி ரூபாய் ஊக்கத் தொகை பெற்றுள்ளனர்.






      Dinamalar
      Follow us