/
உள்ளூர் செய்திகள்
/
திருப்பூர்
/
மாநகராட்சி வரி வசூல்; விடுமுறை இல்லை
/
மாநகராட்சி வரி வசூல்; விடுமுறை இல்லை
ADDED : நவ 29, 2024 07:08 AM
திருப்பூர்; திருப்பூர் மாநகராட்சி கமிஷனர் ராமமூர்த்தி அறிக்கை: மாநகராட்சிக்கு செலுத்த வேண்டிய சொத்து வரி, குடிநீர் கட்டணம், பாதாள சாக்கடை கட்டணம், தொழில் வரி, உரிமக் கட்டணம், வாடகையினங்கள், திடக்கழிவு மேலாண்மைக் கட்டணம் உள்ளிட்டவை மாநகராட்சி வரி வசூல் மையங்களில் பெறப்படுகிறது.
பொதுமக்கள் வரி செலுத்த வசதியாக மாநகராட்சி மைய அலுவலகம், மண்டல அலுவலகங்கள் மற்றும் கணிணி வரி வசூல் மையங்கள் காலை 9:30 முதல் மாலை 5:00 மணி வரை செயல்படும். இம்மையங்கள் சனி மற்றும் ஞாயிறு நாட்களிலும் இந்த நேரங்களில் இயங்கும்.
ஆன்லைன் வாயிலாகவும் வரியினங்களை செலுத்த வசதி செய்யப்பட்டுள்ளது. பொதுமக்கள் நிலுவையின்றி தங்கள் வரியினங்களை செலுத்தி, மாநகராட்சி நிர்வாகத்துக்கு ஒத்துழைக்க வேண்டும்.