/
உள்ளூர் செய்திகள்
/
திருப்பூர்
/
எட்டிப்பார்க்காத ஒப்பந்த நிறுவனத்தினர் கவுன்சிலர்கள் கோபம்
/
எட்டிப்பார்க்காத ஒப்பந்த நிறுவனத்தினர் கவுன்சிலர்கள் கோபம்
எட்டிப்பார்க்காத ஒப்பந்த நிறுவனத்தினர் கவுன்சிலர்கள் கோபம்
எட்டிப்பார்க்காத ஒப்பந்த நிறுவனத்தினர் கவுன்சிலர்கள் கோபம்
ADDED : அக் 26, 2025 03:06 AM
திருப்பூர்: ''திருப்பூர் மாநகராட்சியில் திடக்கழிவு மேலாண்மை பணியில், ஒப்பந்த நிறுவனத்தினர் கட்டாயம் மன்ற கூட்டத்துக்கு வர வேண்டும்'' என கவுன்சிலர்கள் வலியுறுத்தினர்.
திருப்பூர் மாநகராட்சி பகுதியில் நிலவும் குப்பை பிரச்னையில், கோர்ட் அறிவுறுத்தலின்படி அடுத்த கட்ட நடவடிக்கைகள் குறித்த சிறப்பு மாநகராட்சி கவுன்சிலர் கூட்டம் நடந்தது.
கூட்டத்தை துவங்கி வைத்த மேயர் தினேஷ்குமார், மண்டல குழு தலைவர்கள் கருத்துகளை கேட்டார். மண்டல தலைவர்கள் ஒரே வார்த்தையில் ஆமோதித்தனர்.
பின் கவுன்சிலர்கள் பேசியதாவது:
கண்காணிக்க வேண்டும் n ரவிச்சந்திரன், இ.கம்யூ.,: எத்தனை விதிமுறைகளை ஏற்படுத்தினாலும் ஒப்பந்த நிறுவனம் திருந்தாது. அவர்கள் செய்த தவறால் இன்று சட்டத்தின் பிடியில் நாம் சிக்கிக் கொண்டோம்.
அந்நிறுவனத்தினர் மன்ற கூட்டத்தில் பங்கேற்று, விதிமுறைகளை ஏற்று செயல்படுவதாக உறுதியளிக்க வேண்டும். கடுமையாக அதைப் பின்பற்றுவது கண்காணிக்க வேண்டும்.
n குணசேகரன், பா.ஜ.,: குப்பை அகற்றும் பணியில் மேற்பார்வையாளர்கள் இல்லை. இதனால் உரிய கண்காணிப்பு இல்லை. சாக்கடை துார் வாரி கழிவுகள் ரோட்டோரம் கொட்டப்படுகிறது. அது அகற்றுவதில்லை. மீண்டும் சாக்கடைக்குள் சென்று விடுகிறது. செகண்டரி பாய்ண்ட் முழுமையாக அகற்றப்பட வேண்டும்.
எப்போது தீரப் போகிறது? n சாந்தாமணி, ம.தி.மு.க.,: சாக்கடை முழுமையாக துார் வார வேண்டும். பணியாளர்கள், உபகரணங்கள் உரிய எண்ணிக்கையில் வேண்டும். குப்பை அகற்ற ஆட்டோக்கள் போதாது; டிராக்டர் கட்டாயம் வேண்டும். தற்போதுள்ள நிலையில் பணியாற்றினால், எந்த ஜென்மத்திலும் குப்பை பிரச்னை தீராது. திடமான ஆண் பணியாளர்கள் அதிகளவில் நியமிக்க வேண்டும்.
n செந்தில்குமார், காங்.,: சுகாதார பிரிவில் எவ்வளவு அலுவலர்கள் உள்ளனர் எனத் தெரிய வேண்டும். நகரின் தேவைக்கேற்ப அலுவலர், ஊழியர்களை கேட்டுப் பெற வேண்டும். அவர்கள் முறையாக திடக்கழிவு மேலாண்மையை கவனிக்க வேண்டும்.
திறன் மிக்க அலுவலர்கள் பணியமர்த்தி அனைத்து இடங்களிலும் கண்காணிப்பு தீவிரப்படுத்த வேண்டும். புதிய குப்பை வரி விதித்து நோட்டீஸ் அனுப்பப்பட்டுள்ளது. இது குறித்து கடந்த கூட்டத்தில் குறிப்பிட்டும் இந்த தவறு மீண்டும் ஏற்படுகிறது.
நிபந்தனை கடைபிடிக்கணும் n மணிமேகலை, மா.கம்யூ.,: குப்பை அகற்றும் நிறுவனம் அனைத்து நிபந்தனைகளையும் முறையாகப் பின்பற்றுவதில்லை. இதை அதிகாரிகள் கண்காணிக்க வேண்டும். நிறுவனம் அதை முறையாகப் பின்பற்ற வேண்டும்.
n செல்வராஜ், இ.கம்யூ.,: பல பகுதிகளில் இறைச்சி கழிவுகள் ரோட்டிலும், குப்பையிலும் வீசப்படுகிறது. இறைச்சி கடைகளை முறைப்படுத்த வேண்டும். உரிமம் வழங்கி கணக்கெடுத்தால் மட்டுமே இறைச்சி கழிவுகள் முறையாக கையாளுவதை உறுதிப்படுத்த முடியும். தொழிற்சாலைகளில் கழிவுகள் அகற்றுவதற்கு எந்த அடிப்படையில் கட்டணம் வசூலிக்கப்படுகிறது எனத் தெரிய வேண்டும்.
சட்டப்பாதுகாப்பு வேண்டும் n காந்திமதி, தி.மு.க.,: எனது 58வது வார்டுக்கு உட்பட்ட ஆதி திராவிடர் காலனியில் ஆக்கிரமிப்பு அகற்றி ரோடு அமைக்கப்பட்டது. ஆனால், தனி நபர் ஒருவர் அந்த இடத்தை சொந்தம் கொண்டாடி, எனது கணவர் மீது வன்கொடுமை தடுப்பு சட்டத்தில் புகார் அளித்துள்ளார்.
மேலும், தனது பின்புலத்தைப் பயன்படுத்தி வன்கொடுமை தடுப்பு சட்டத்தில் வழக்கு பதிய வேண்டும் என போலீசாரை வலியுறுத்தியுள்ளார். பொது மக்களுக்கான பணிக்கு முன் நிற்பதால் இது போல் நடக்கிறது. சட்டப் பாதுகாப்பு வேண்டும். அதிகாரிகள் மீதும் புகார் அளிப்பதாக மிரட்டல் விடுத்துள்ளார்.

