/
உள்ளூர் செய்திகள்
/
திருப்பூர்
/
கவுன்சிலிங் இன்று துவங்குகிறது 1,751 ஆசிரியர்கள் விண்ணப்பம்
/
கவுன்சிலிங் இன்று துவங்குகிறது 1,751 ஆசிரியர்கள் விண்ணப்பம்
கவுன்சிலிங் இன்று துவங்குகிறது 1,751 ஆசிரியர்கள் விண்ணப்பம்
கவுன்சிலிங் இன்று துவங்குகிறது 1,751 ஆசிரியர்கள் விண்ணப்பம்
ADDED : ஜூன் 30, 2025 11:50 PM
திருப்பூர், ; ஆசிரியர் இடமாறுதல் கவுன்சிலிங் இன்று துவங்க உள்ளது. திருப்பூர் மாவட்டத்தில் கவுன்சிலிங்கில் பங்கேற்க இடமாறுதலுக்கு, 1,751 தலைமை ஆசிரியர், ஆசிரியர்கள் விண்ணப்பித்துள்ளனர்.
அரசு பள்ளி ஆசிரியர்கள் இடமாறுதலுக்கான கவுன்சிலிங்குக்கு, 'எமிஸ்' இணையதளம் வாயிலாக ஜூன், 19 - 25 வரை விண்ணப்பிக்க அழைப்பு விடுக்கப்பட்டது.
பதிவு செய்யப்பட்ட அனைத்து விண்ணப்பங்களுக்கும், கடந்த, 27ம் தேதி முதன்மை கல்வி அலுவலகத்தில் இருந்து ஒப்புதல் வழங்கப்பட்டது. முன்னுரிமை பட்டியல் வெளியிடுதல், முன்னுரிமைப் பட்டியலில் திருத்தம் மற்றும் முறையீடுகள் ஏதாவது இருந்தால் தெரிவிக்க விண்ணப்பித்த ஆசிரியர்களுக்கு, 28ம் தேதி அழைப்பு விடுக்கப்பட்டது.
இந்நிலையில், அரசு மற்றும் மாநகராட்சி மேல்நிலைப்பள்ளித் தலைமை ஆசிரியர்கள் கவுன்சிலிங் (வருவாய் மாவட்டத்துக்குள்) இன்று துவங்குகிறது.
நாளை (2ம் தேதி) மேல்நிலைப்பள்ளி தலைமை ஆசிரியர் மாவட்டம் விட்டு மாவட்டம் மாறுதல், வரும், 3ம் தேதி, முதுநிலை ஆசிரியர், கணினி ஆசிரியர், உடற்கல்வி இயக்குனர், தொழிற்கல்வி ஆசிரியர்கள் மாறுதல் நடக்கிறது.
தொடர்ந்து, வரும், 7ம் தேதி வரை கவுன்சிலிங் நடக்கிறது.