ADDED : பிப் 16, 2024 01:04 AM
உடுமலை:பொதுத்தேர்வின் முதற்கட்டமான செய்முறைத்தேர்வுகள் பள்ளிகளில் நடக்கிறது.
உடுமலை சுற்றுப்பகுதியில் மார்ச் மாதம் துவங்க உள்ள நடப்பாண்டு தேர்வுகளுக்கு, மாணவர்களை தயார்படுத்த சிறப்பு வகுப்புகள் நடத்துகின்றனர்.
தேர்வு பயத்தாலும், சரியாக படிக்காத காரணத்தாலும் தேர்வை புறக்கணிக்க எண்ணி, பள்ளிகளுக்கு விடுப்பு எடுக்கும் மாணவர்களுக்கு முக்கியத்துவம் அளித்து, அவர்களின் பெற்றோருக்கும் ஆசிரியர்கள் ஆலோசனை கூறுகின்றனர்.
ஆசிரியர்கள் கூறுகையில், 'இறுதி நேரத்தில் அனைத்து பாடங்களையும் படிப்பதால், தேர்வு நேரத்தில் பாடங்களை மறக்கின்றனர்.
பயத்தால், பள்ளிக்கு மாணவர்கள் விடுப்பு எடுக்கின்றனர். இவ்வாறு அச்சப்படும் மாணவர்களை ஊக்கப்படுத்த பெற்றோரும் ஒத்துழைக்க வேண்டும்.
பள்ளிகளில், நுாறு சதவீதம் மாணவர்களை தேர்வுக்கு வரவழைக்க, முயற்சிகள் எடுக்கப்படுகிறது. பெற்றோரும் மாணவர்களை கண்காணிக்க வேண்டும்,' என்றனர்.