தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/உள்ளூர் செய்திகள்/திருப்பூர்/கவுன்ட் டவுன் ஸ்டார்ட் : கண்கொத்தி பாம்பாய் வேட்பாளர்கள்

கவுன்ட் டவுன் ஸ்டார்ட் : கண்கொத்தி பாம்பாய் வேட்பாளர்கள்

கவுன்ட் டவுன் ஸ்டார்ட் : கண்கொத்தி பாம்பாய் வேட்பாளர்கள்


UPDATED : அக் 08, 2026 03:46 AM

ADDED : அக் 08, 2026 12:36 AM

Follow on GoogleFavourite on Google

UPDATED : அக் 08, 2026 03:46 AM ADDED : அக் 08, 2026 12:36 AM


Follow on Google
Latest Tamil News
அ நிறம் | அளவு

திருப்பூர்: தாராபுரம் இடைத்தேர்தலில் பதிவான வாக்குகளை சுமந்துள்ள ஓட்டுப்பதிவு இயந்திரங்கள், திருப்பூர் எல்.ஆர்.ஜி. கல்லுாரி ஓட்டு எண்ணிக்கை மையத்தில் பலத்த பாதுகாப்புடன் வைக்கப்பட்டுள்ளன. நாளை காலை ஓட்டு எண்ணிக்கை நடைபெற உள்ள நிலையில், ஸ்ட்ராங் ரூம் மற்றும் அதைச் சுற்றியுள்ள பகுதிகளில் பாதுகாப்பு ஏற்பாடுகள் தீவிரப்படுத்தப்பட்டுள்ளன.

தாராபுரம் சட்டசபை தொகுதிக்கான இடைத்தேர்தலில் த.வெ.க., - தி.மு.க. - அ.தி.மு.க., - இந்திய கம்யூ. - நாம் தமிழர் - சுயேச்சைகள் என 22 வேட்பாளர்கள் போட்டியிட்டனர். தொகுதியில் 2 லட்சத்து 23 ஆயிரத்து 306 வாக்காளர்கள் உள்ளனர்.

320 ஓட்டுச்சாவடிகளில் நடந்த மின்னணு ஓட்டுப்பதிவில் 1 லட்சத்து 79 ஆயிரத்து 214 பேர் வாக்களித்தனர். இது 80.25 சதவீதமாகும். ஏற்கனவே 1,201 மூத்த வாக்காளர்கள் மற்றும் மாற்றுத்திறனாளிகள் தபால் மூலம் வாக்களித்துள்ளனர்.

ஓட்டுப்பதிவின்போது பழுதான 16 வி.வி.பேட் இயந்திரங்களும், ஒரு கன்ட்ரோல் யூனிட்டும் மாற்றப்பட்டன. மொத்தம் 642 பேலட் யூனிட்கள், 321 கன்ட்ரோல் யூனிட்கள், 337 வி.வி.பேட் இயந்திரங்கள் பயன்படுத்தப்பட்டன.

ஓட்டுப்பதிவு முடிந்ததும் சீல் வைக்கப்பட்ட இயந்திரங்கள், துப்பாக்கி ஏந்திய போலீஸ் பாதுகாப்புடன் எல்.ஆர்.ஜி. கல்லுாரி ஓட்டு எண்ணிக்கை மையத்துக்கு கொண்டு வரப்பட்டன. தேர்தல் பொதுப் பார்வையாளர் சின்மய் புண்ட்லிக்ராவ் கோட்மரே, மாவட்ட தேர்தல் அலுவலரும் கலெக்டருமான மனிஷ் நாரணவரே தலைமையில், வேட்பாளர்கள் மற்றும் முகவர்கள் முன்னிலையில் அவை ஸ்ட்ராங் ரூமில் வைக்கப்பட்டு சீல் வைக்கப்பட்டன.

ஸ்ட்ராங் ரூம் வளாகத்தில் கண்காணிப்பு கேமராக்கள் பொருத்தப்பட்டுள்ளதுடன், 24 மணி நேரமும் கண்காணிப்பு நடைபெறுகிறது. கேமரா பதிவுகளை கண்காணிக்க துணை கலெக்டர் நிலையிலான அதிகாரிகளும் பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர்.

வேட்பாளர்களும் தங்கள் பிரதிநிதிகள் மூலம் கண்காணிப்பை மேற்கொண்டு வருகின்றனர். மூன்று ஷிப்ட்களாக பிரதிநிதிகள் நியமிக்கப்பட்டு, ஓட்டு எண்ணிக்கை மைய வளாகத்தில் அமைக்கப்பட்டுள்ள தனி அறையில் இருந்து கண்காணிப்பு கேமரா பதிவுகளை தொடர்ந்து பார்வையிட்டு வருகின்றனர்.

நாளை காலை 8:00 மணிக்கு ஓட்டு எண்ணிக்கை தொடங்க உள்ளதால், அதுவரை ஓட்டு இயந்திரங்கள் பலத்த பாதுகாப்பில் வைக்கப்பட்டிருக்கும். முகவர்கள் முன்னிலையில் ஸ்ட்ராங் ரூம் திறக்கப்பட்டு, அதன் பின்னர் இயந்திரங்கள் எண்ணிக்கை மேஜைகளுக்கு எடுத்துச் செல்லப்பட உள்ளன.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us